• Apr 24 2026

கல்முனை மற்றும் மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' ஆரம்பித்து வைப்பு!

Ziya / Apr 24th 2026, 11:06 am
image

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி அத்துடன் மாளிகைக்காடு  அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு,  கல்வேலி அமைக்கும் பணிகள் புதன்கிழமை(23)  உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.


இந் நிகழ்வில்  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும்   பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.


மக்களின் நீண்ட கால பிரச்சினையான கடல் அரிப்பு பிரச்சனைக்கு  பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா  இதற்கு முன்னரும் பல நடவடிக்கைகள் எடுத்த வெற்றி கண்ட போதிலும் எஞ்சியுள்ள சில பகுதிகளுக்கும்   கல்வேலி இட்டு பாதுகாக்கும் பணிதற்போது  உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கல்முனை மற்றும் மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' ஆரம்பித்து வைப்பு கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி அத்துடன் மாளிகைக்காடு  அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு,  கல்வேலி அமைக்கும் பணிகள் புதன்கிழமை(23)  உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.இந் நிகழ்வில்  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும்   பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.மக்களின் நீண்ட கால பிரச்சினையான கடல் அரிப்பு பிரச்சனைக்கு  பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா  இதற்கு முன்னரும் பல நடவடிக்கைகள் எடுத்த வெற்றி கண்ட போதிலும் எஞ்சியுள்ள சில பகுதிகளுக்கும்   கல்வேலி இட்டு பாதுகாக்கும் பணிதற்போது  உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement