• Jan 22 2025

யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துங்கள் - கடும் மழைக்குள் சித்தாண்டி மக்கள் போராட்டம்

Chithra / Jan 2nd 2025, 7:28 am
image


மட்டக்களப்பு சித்தாண்டியின் மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு யானை புகுந்து தாக்கியதில் சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் நேற்று கடும் மழைக்கும் மத்தியிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட சித்தாண்டி, சந்தை வீதி வீடொன்றில் நேற்றுமுன்தினம் அதிகாலை

யானை தாக்குதலில் இலக்கான 11 மாத கைக்குழந்தை விநாயகம் மிதுஷாளினி, மற்றும் அவரது சகோதரர் விநாயகம் விதுசன் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ச்சியாக சித்தாண்டி பகுதியில் நடைபெறும் யானையினை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் 

முறையான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகளை கண்டித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,

இ.சிறிநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் ஒரு வாரத்திற்கு சித்தாண்டி பகுதியில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளை தங்கியிருந்து யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.


யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துங்கள் - கடும் மழைக்குள் சித்தாண்டி மக்கள் போராட்டம் மட்டக்களப்பு சித்தாண்டியின் மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு யானை புகுந்து தாக்கியதில் சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் நேற்று கடும் மழைக்கும் மத்தியிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏறாவூர் பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட சித்தாண்டி, சந்தை வீதி வீடொன்றில் நேற்றுமுன்தினம் அதிகாலையானை தாக்குதலில் இலக்கான 11 மாத கைக்குழந்தை விநாயகம் மிதுஷாளினி, மற்றும் அவரது சகோதரர் விநாயகம் விதுசன் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ச்சியாக சித்தாண்டி பகுதியில் நடைபெறும் யானையினை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும் முறையான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகளை கண்டித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.அத்துடன் ஒரு வாரத்திற்கு சித்தாண்டி பகுதியில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளை தங்கியிருந்து யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement