• Dec 03 2024

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்...! சுயிந்தன் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Dec 3rd 2023, 9:41 pm
image

அலெக்ஸிற்கு நீதி வேண்டும் ஆனால் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் என  வலிகாமம் மேற்கு பிரதேச சபை  முன்னாள் உறுப்பினர் துரைராஜா சுயிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அலெக்ஸிற்கு நடந்த விடயம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம், அதற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏனென்றால் அலெக்ஸிற்கு நீதி வேண்டும் என்பது உண்மையான விடயம் அது வட்டுக்கோட்டை பொலிஸாசாகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்த பொலிஸாகவும் இருக்கலாம் இதற்கு நீதி வேண்டும் என்பது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

இது சம்பந்தமான அரசியல் சார்ந்த சில செயல்பாடுகளை முன்னெடுத்து, ஓரிருவரை வைத்து அரசியல் நாடகம் செய்வதை தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏன் என்று சொன்னால் நானும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு விடயத்திலே இந்த விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.

உண்மையில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை அரசியலோடு வைத்திருக்க வேண்டும், மக்கள் சார்ந்த விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் வழிநடத்த வேண்டும். மக்களை பிழையான முறையில் வழி நடத்திக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை இந்த இடத்தில் கொண்டு காட்டுவது என்பது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

உண்மையில் பொலிஸ் குற்றம் செய்திருக்கின்றது,  பொலிஸாருக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது, தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கையாக இருக்கின்றது. அந்தக் கோரிக்கையை நாங்கள் மறுக்கவில்லை, அதற்கான நீதி கட்டாயம் தேவை அந்த நீதிக்காக நாங்கள் போராட வேண்டும்.

ஆனால் அரசியல் சார்ந்த தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களுடைய சின்னங்கள் பொறிக்கப்பட்ட விடயங்களை காட்டி தங்களுக்கு சுயலாப அரசியலை தேடுகின்றவர்கள் உண்மையில் இந்த தமிழ் மக்களுக்காக இப்போது கதைப்பார்கள் நாளைக்கு இருக்க மாட்டார்கள்.

அலெக்ஸ் இறந்த உடன் இந்த இடத்துக்கு யாரும் வரவில்லை அது மன வேதனையான ஒரு விடயம். அந்த இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். ஓரிரு பத்திரிகையாளர்களுடன் இரவு எட்டு மணி வரை இவ்விடத்தில் இருந்து இருக்கின்றோம்.  யாரும் வரவில்லை, தங்களுடைய தேவைகளுக்காக இப்போ வந்து ஒரு வேலை திட்டத்தை செய்கிறார்கள். 

உண்மையில்  அலெக்ஸிற்கு இனி வரும் காலத்தில் ஒரு நீதி வேண்டும். அந்த நீதி நீதிமன்றத்தின் ஊடாக கட்டாயம் கிடைக்கும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம்,  அவர்கள் ஊடாக  வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உடனடியாக நடவடிக்கை தேவை என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம். 

இதில் மக்கள் யாரும் எந்த விடயத்தை கூறினாலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அரசியல் சார்ந்த விடயங்களை மக்களை வைத்து பாவிக்க வேண்டாம் என்பதை நான் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். சுயிந்தன் வேண்டுகோள்.samugammedia அலெக்ஸிற்கு நீதி வேண்டும் ஆனால் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் என  வலிகாமம் மேற்கு பிரதேச சபை  முன்னாள் உறுப்பினர் துரைராஜா சுயிந்தன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அலெக்ஸிற்கு நடந்த விடயம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம், அதற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.ஏனென்றால் அலெக்ஸிற்கு நீதி வேண்டும் என்பது உண்மையான விடயம் அது வட்டுக்கோட்டை பொலிஸாசாகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்த பொலிஸாகவும் இருக்கலாம் இதற்கு நீதி வேண்டும் என்பது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.இது சம்பந்தமான அரசியல் சார்ந்த சில செயல்பாடுகளை முன்னெடுத்து, ஓரிருவரை வைத்து அரசியல் நாடகம் செய்வதை தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏன் என்று சொன்னால் நானும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு விடயத்திலே இந்த விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.உண்மையில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை அரசியலோடு வைத்திருக்க வேண்டும், மக்கள் சார்ந்த விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் வழிநடத்த வேண்டும். மக்களை பிழையான முறையில் வழி நடத்திக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை இந்த இடத்தில் கொண்டு காட்டுவது என்பது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.உண்மையில் பொலிஸ் குற்றம் செய்திருக்கின்றது,  பொலிஸாருக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது, தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கையாக இருக்கின்றது. அந்தக் கோரிக்கையை நாங்கள் மறுக்கவில்லை, அதற்கான நீதி கட்டாயம் தேவை அந்த நீதிக்காக நாங்கள் போராட வேண்டும்.ஆனால் அரசியல் சார்ந்த தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களுடைய சின்னங்கள் பொறிக்கப்பட்ட விடயங்களை காட்டி தங்களுக்கு சுயலாப அரசியலை தேடுகின்றவர்கள் உண்மையில் இந்த தமிழ் மக்களுக்காக இப்போது கதைப்பார்கள் நாளைக்கு இருக்க மாட்டார்கள்.அலெக்ஸ் இறந்த உடன் இந்த இடத்துக்கு யாரும் வரவில்லை அது மன வேதனையான ஒரு விடயம். அந்த இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். ஓரிரு பத்திரிகையாளர்களுடன் இரவு எட்டு மணி வரை இவ்விடத்தில் இருந்து இருக்கின்றோம்.  யாரும் வரவில்லை, தங்களுடைய தேவைகளுக்காக இப்போ வந்து ஒரு வேலை திட்டத்தை செய்கிறார்கள். உண்மையில்  அலெக்ஸிற்கு இனி வரும் காலத்தில் ஒரு நீதி வேண்டும். அந்த நீதி நீதிமன்றத்தின் ஊடாக கட்டாயம் கிடைக்கும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம்,  அவர்கள் ஊடாக  வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உடனடியாக நடவடிக்கை தேவை என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம். இதில் மக்கள் யாரும் எந்த விடயத்தை கூறினாலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அரசியல் சார்ந்த விடயங்களை மக்களை வைத்து பாவிக்க வேண்டாம் என்பதை நான் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement