• May 17 2024

மொட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிராக விரைவில் கடும் நடவடிக்கை- சாகர காரியவசம்!

Sharmi / Feb 8th 2023, 12:24 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள், தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் ஏதும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் 300 இற்கும் அதிகமாக தேர்தல் தொகுதிகளில் பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வீணை சின்னத்திலும், கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்திலும் போட்டியிடுவோம்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகிறார்.

பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்படுகிறார். இவருக்கு எதிராக கடும் நடவடிக்கை கட்சி மட்டத்தில் எடுக்கப்படும்.இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்படும்.கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்

மொட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிராக விரைவில் கடும் நடவடிக்கை- சாகர காரியவசம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள், தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் ஏதும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் 300 இற்கும் அதிகமாக தேர்தல் தொகுதிகளில் பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தில் வீணை சின்னத்திலும், கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்திலும் போட்டியிடுவோம்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகிறார்.பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்படுகிறார். இவருக்கு எதிராக கடும் நடவடிக்கை கட்சி மட்டத்தில் எடுக்கப்படும்.இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்படும்.கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement