பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு - தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அத்தோடு, நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவல்களும் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பலுசிஸ்தானின் கிழக்கு - தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அத்தோடு, நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவல்களும் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.இதேவேளை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.