புத்தளம் - உடப்புப் பகுதியில் கடற்காற்று மிகவும்கடுமையாக வீசுவதன் காரணமாக கரைவலை மற்றும் இயந்திரப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடப்பு கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதல் கடுமையான காற்று வீசி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் ஓரிரு வள்ளங்கள் கடலுக்கு செலுத்தமுற்பட்ட போது அவை நீரில் தாண்டதாகவும் பின்னர் அவை கரையேற்றப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து வீசிவரும் காற்றினால் மீனவர்கள் வாடிகளில் வலைவேலைகளில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறு காற்று வீசினால் கடலுக்குச் செல்ல முடியமால் தமது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உடப்பு கடற்கரையில் கடுமையான காற்று; கடலுக்கு செல்ல முடியாத நிலையில் மீனவர்கள் புத்தளம் - உடப்புப் பகுதியில் கடற்காற்று மிகவும்கடுமையாக வீசுவதன் காரணமாக கரைவலை மற்றும் இயந்திரப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடப்பு கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதல் கடுமையான காற்று வீசி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் ஓரிரு வள்ளங்கள் கடலுக்கு செலுத்தமுற்பட்ட போது அவை நீரில் தாண்டதாகவும் பின்னர் அவை கரையேற்றப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து வீசிவரும் காற்றினால் மீனவர்கள் வாடிகளில் வலைவேலைகளில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இவ்வாறு காற்று வீசினால் கடலுக்குச் செல்ல முடியமால் தமது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.