மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் கொச்சிக்கடையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான சப்ரான் என்ற நண்பருடன் 6 மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை தேடுவதற்காக புகைப்படக் கலைஞரான தனது தந்தையின் கமராவை பயன்படுத்துவதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக் நண்பரால் போதைப்பொருளுக்கு அடிமையானா மாணவன் மாத்தறையில் கைது.samugammedia மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவன் கொச்சிக்கடையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான சப்ரான் என்ற நண்பருடன் 6 மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை தேடுவதற்காக புகைப்படக் கலைஞரான தனது தந்தையின் கமராவை பயன்படுத்துவதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.