• Nov 19 2024

22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு

Chithra / Aug 16th 2024, 4:24 pm
image

 

மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். 

அவர்களில் 15 பேர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சம்பவத்தை ஆதரித்த பெண் ஒருவரையும் மேலும் மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு  மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், அவர்களை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். அவர்களில் 15 பேர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.சம்பவத்தை ஆதரித்த பெண் ஒருவரையும் மேலும் மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement