• Sep 21 2024

தேசிய கொள்கை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க உப குழு நியமனம்!

Chithra / Dec 4th 2022, 1:44 pm
image

Advertisement

தேசிய கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு, தேசிய கொள்கை ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை மாதிரியை தயாரிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை உருவாக்குவதற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய சபை உபக்குழுவில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு, கொள்கை உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான ஒரு சுயாதீன அமைப்பாக ஒரு சட்டத்தின் மூலம் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படைத் திட்டங்கள் ஜனவரி நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கொள்கை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க உப குழு நியமனம் தேசிய கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு, தேசிய கொள்கை ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை மாதிரியை தயாரிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை உருவாக்குவதற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய சபை உபக்குழுவில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆணைக்குழு, கொள்கை உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான ஒரு சுயாதீன அமைப்பாக ஒரு சட்டத்தின் மூலம் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன் அடிப்படைத் திட்டங்கள் ஜனவரி நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement