• Apr 27 2024

இலங்கையில் தரமற்ற டீசல் விநியோகம்? – வெளியான அதிர்ச்சித் தகவல்..! samugammedia

Chithra / Nov 7th 2023, 12:33 pm
image

Advertisement

 

சந்தையில் தரமற்ற டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கையிருப்பில் தற்போது காணப்படும் டீசல் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் டீசல் தரமற்றது என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அந்த டீசல் தொகை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் சுயாதீன விசாரணை குழு துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும், டீசல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தரம் குறைந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் , கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில் அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கையில் தரமற்ற டீசல் விநியோகம் – வெளியான அதிர்ச்சித் தகவல். samugammedia  சந்தையில் தரமற்ற டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கையிருப்பில் தற்போது காணப்படும் டீசல் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் டீசல் தரமற்றது என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அந்த டீசல் தொகை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் சுயாதீன விசாரணை குழு துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும், டீசல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தரம் குறைந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் , கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில் அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement