• Apr 19 2025

புதுக்குடியிருப்பு சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி

Thansita / Apr 9th 2025, 8:43 pm
image

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாவனைக்குதவாத வகையில் இருந்த மாட்டு இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுஇ கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் உரிமையாளரின் அனுமதியுடன் எரித்து அழிக்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையில் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன் , கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோரும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.


புதுக்குடியிருப்பு சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாவனைக்குதவாத வகையில் இருந்த மாட்டு இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுஇ கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் உரிமையாளரின் அனுமதியுடன் எரித்து அழிக்கப்பட்டிருந்தது.குறித்த சோதனை நடவடிக்கையில் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன் , கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோரும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement