• Oct 16 2026

இலங்கையில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்; மக்கள் செய்ய வேண்டியது என்ன?

Chithra / Oct 15th 2026, 11:50 am
image


இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இதற்கான காரணம் என்ன? பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா?


இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.


கடந்த 3 முதல் 4 வாரங்களாக இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே விசேட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


குறிப்பாக, கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானோருக்கு  இன்ஃபுளுவென்சா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


எனினும், இந்த நோய் பொதுவாக முறையான சிகிச்சையுடன் 3 முதல் 4 நாட்களுக்குள் குணமடையக்கூடியது என்பதால் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆனால், கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய, சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இருமல், தும்மலின்போது வெளியேறும் நீர்த்துளிகள் மற்றும் தொடுகை மூலம் இந்தத் தொற்று பரவக்கூடும்.


எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  2, 3 நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுக்கவும், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளைக் கழுவவும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்; மக்கள் செய்ய வேண்டியது என்ன இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்கான காரணம் என்ன பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாஇது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.கடந்த 3 முதல் 4 வாரங்களாக இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே விசேட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.குறிப்பாக, கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானோருக்கு  இன்ஃபுளுவென்சா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.எனினும், இந்த நோய் பொதுவாக முறையான சிகிச்சையுடன் 3 முதல் 4 நாட்களுக்குள் குணமடையக்கூடியது என்பதால் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய, சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இருமல், தும்மலின்போது வெளியேறும் நீர்த்துளிகள் மற்றும் தொடுகை மூலம் இந்தத் தொற்று பரவக்கூடும்.எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  2, 3 நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுக்கவும், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளைக் கழுவவும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement