கண்டி நகரில் தனியார் ஐந்து மாடிக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் நிர்மாணப் பணிகளின்போது ஏற்பட்ட திடீர் இடிபாடில் மூன்று கட்டுமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டி கொட்டுகொடெல்ல வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அண்மையில் அமைந்துள்ள குறித்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இன்று (24) மதியம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்டு கான்கிரீட் சிதைவுகளுக்குள் சிக்கி கடுமையாக காயமடைந்தனர்.
அப்பகுதி மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்கு அவசர சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், கட்டுமானப் பகுதி பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததுடன், பயன்படுத்தப்பட்ட சிமெண்டு பிளாக் கற்களுடன் கட்டிடத்தின் வெளிப்பகுதி சரிந்ததே விபத்துக்குக் காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு சென்ற கண்டி பொலிஸார், அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டி மாநகர அவசர தீயணைப்பு பிரிவினரும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
இந்த விபத்து தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்; 3 தொழிலாளர்கள் படுகாயம் கண்டியில் பரபரப்பு கண்டி நகரில் தனியார் ஐந்து மாடிக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் நிர்மாணப் பணிகளின்போது ஏற்பட்ட திடீர் இடிபாடில் மூன்று கட்டுமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.கண்டி கொட்டுகொடெல்ல வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அண்மையில் அமைந்துள்ள குறித்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இன்று (24) மதியம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்டு கான்கிரீட் சிதைவுகளுக்குள் சிக்கி கடுமையாக காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்கு அவசர சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், கட்டுமானப் பகுதி பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததுடன், பயன்படுத்தப்பட்ட சிமெண்டு பிளாக் கற்களுடன் கட்டிடத்தின் வெளிப்பகுதி சரிந்ததே விபத்துக்குக் காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.இதனிடையே, சம்பவ இடத்துக்கு சென்ற கண்டி பொலிஸார், அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டி மாநகர அவசர தீயணைப்பு பிரிவினரும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.இந்த விபத்து தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.