தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை, ஊழலற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் எனநாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் மூலம் தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் எம். ஏ.சுமந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும்,ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்திருந்தார்.
அவர் இந்த சொற்களை பயன்படுத்தி இதனை தெரிவித்தவேளை பலர் உடனடியாக இது கோட்டாபய ராஜபக்சவின் கூற்றை நினைவுபடுதுகின்றது என தெரிவித்தனர்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச நான் அனைவரும் எனது வெற்றியின் பங்குதாரர்களாகயிருக்கவேண்டும் என விரும்பினேன், ஆனால் வடபகுதி மக்கள் இந்த வெற்றியில் என்னுடன் இணைந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
வடபகுதி மக்களிற்கு அவ்வேளை உணர்வொன்று காணப்பட்டது, அது சரியானது என நிரூபிக்கப்பட்டது ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்த தென்பகுதி மக்களே அவரை துரத்தினார்கள்.
நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம், விரும்புகின்றோம், 70 வருடங்களிற்கு மேலான ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கோருகின்ற மாற்றம் இல்லை. நாங்கள் அந்த மாற்றத்தினையும் கோருகின்றோம்.
ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம்,இந்த முயற்சியில் நாங்கள் தோழர் அனுரகுமாரதிசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம்.
நாங்கள் அவருக்கு இந்த விடயத்தில் முழுமையாக ஆதரவை வழங்குகின்றோம், ஊழலை ஒழிப்பதில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இது குறித்து எந்த கேள்வியும் இல்லை.
வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வெவ்வேறு மொழிகளை வசிக்கின்ற மக்கள்,அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தவர்களாகயிருக்கலாம் ஆனால், அவர்களிற்கும் அரசாங்க அதிகாரங்களிற்கான சமமான அணுகல் காணப்படும் மாற்றத்தை விரும்புகின்றோம். இதுவே உண்மையான மாற்றமாகயிருக்கும்.
தோழர் அனுரகுமார இனவெறி உணர்வுகளுடன் இந்த கருத்தினை வெளியிட்டார் என நான் கருதவில்லை,
அவரை எனக்கு நன்கு தெரியும், அவர் இனவாத உணர்வுகள் அற்ற மனிதர், அவர் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார், இந்த விடயத்தில் எங்களிற்கு வேறு உணர்வுகள் வித்தியாசமான உணர்வுகள் இல்லை,
நாங்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கலாம் ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இணைந்திருக்கலாம்.
ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அனுரகுமாரவுக்கு முழுமையான ஆதரவு – சுமந்திரன் திட்டவட்டம் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை, ஊழலற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் எனநாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்த தேர்தல் மூலம் தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் எம். ஏ.சுமந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும்,ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்திருந்தார்.அவர் இந்த சொற்களை பயன்படுத்தி இதனை தெரிவித்தவேளை பலர் உடனடியாக இது கோட்டாபய ராஜபக்சவின் கூற்றை நினைவுபடுதுகின்றது என தெரிவித்தனர்.அனுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச நான் அனைவரும் எனது வெற்றியின் பங்குதாரர்களாகயிருக்கவேண்டும் என விரும்பினேன், ஆனால் வடபகுதி மக்கள் இந்த வெற்றியில் என்னுடன் இணைந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.வடபகுதி மக்களிற்கு அவ்வேளை உணர்வொன்று காணப்பட்டது, அது சரியானது என நிரூபிக்கப்பட்டது ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்த தென்பகுதி மக்களே அவரை துரத்தினார்கள்.நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம், விரும்புகின்றோம், 70 வருடங்களிற்கு மேலான ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கோருகின்ற மாற்றம் இல்லை. நாங்கள் அந்த மாற்றத்தினையும் கோருகின்றோம்.ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம்,இந்த முயற்சியில் நாங்கள் தோழர் அனுரகுமாரதிசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம்.நாங்கள் அவருக்கு இந்த விடயத்தில் முழுமையாக ஆதரவை வழங்குகின்றோம், ஊழலை ஒழிப்பதில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இது குறித்து எந்த கேள்வியும் இல்லை.வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வெவ்வேறு மொழிகளை வசிக்கின்ற மக்கள்,அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தவர்களாகயிருக்கலாம் ஆனால், அவர்களிற்கும் அரசாங்க அதிகாரங்களிற்கான சமமான அணுகல் காணப்படும் மாற்றத்தை விரும்புகின்றோம். இதுவே உண்மையான மாற்றமாகயிருக்கும்.தோழர் அனுரகுமார இனவெறி உணர்வுகளுடன் இந்த கருத்தினை வெளியிட்டார் என நான் கருதவில்லை,அவரை எனக்கு நன்கு தெரியும், அவர் இனவாத உணர்வுகள் அற்ற மனிதர், அவர் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார், இந்த விடயத்தில் எங்களிற்கு வேறு உணர்வுகள் வித்தியாசமான உணர்வுகள் இல்லை,நாங்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கலாம் ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இணைந்திருக்கலாம்.