• Dec 11 2024

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல - புத்தர் செய்யாததை செய்யப் பார்கிறார் - மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவிப்பு!!

Tamil nila / Nov 7th 2024, 9:06 pm
image

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல அவர் ஒரு மதமாற்றி என இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுமந்திரன் மீது பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமற்றவர் என நான் ஆறு வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன் கட்சிக்கும் அதனை தெரிவித்திருக்கிறேன். 

இந்தியாவிலிருந்து வருகை தந்த புத்தர் கூட மத மாற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டது இல்லை சுமந்திரன் மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். 

சாவித்திரி சுமந்திரன் சுமந்திரனுடைய மனைவியின் இங்கிலாந்தில் இருந்து மதமாற்ற செயற்பாடுகளுக்காக டொலரில் பணம் வழங்கப்படுகிறது அதை அவர் பாராளுமன்ற கணக்கரைக்கைக்கு வழங்கியுள்ளார். 

சாவித்திரி சுமந்திரன் ஒரு கருவி மட்டுமே சுமந்திரன் தான் மதமாற்ற செயற்பாடுகளை முன் ஒன்று செயல்படுத்துகிறார். 

நாங்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல மத மாற்றி களுக்கு எதிரானவர்கள் என பல்வேறு ஊடக சந்திப்புகளில் வலியுறுத்தி வந்துள்ளேன். 

மதமாற்றி களுக்கு எதிராக சைவத்தை பாதுகாப்பதற்காக சுயேச்சை குழுவாக இலக்கம் 14 ஆமை சின்னத்தில் சிவ தொண்டர்கள் ஒன்பது பேர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 

4 இலட்சம் சைவ வாக்காளர்கள் உள்ள நிலையில் எமது இனத்தையும் மதத்தையும் காப்பாற்றுவதற்காக ஆமை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஆகவே சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஏற்ற நபர் அல்ல அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழ் மக்கள் இனமாகவும் மதமாகவும் அழிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல - புத்தர் செய்யாததை செய்யப் பார்கிறார் - மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவிப்பு சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல அவர் ஒரு மதமாற்றி என இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சுமந்திரன் மீது பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமற்றவர் என நான் ஆறு வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன் கட்சிக்கும் அதனை தெரிவித்திருக்கிறேன். இந்தியாவிலிருந்து வருகை தந்த புத்தர் கூட மத மாற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டது இல்லை சுமந்திரன் மதமாற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். சாவித்திரி சுமந்திரன் சுமந்திரனுடைய மனைவியின் இங்கிலாந்தில் இருந்து மதமாற்ற செயற்பாடுகளுக்காக டொலரில் பணம் வழங்கப்படுகிறது அதை அவர் பாராளுமன்ற கணக்கரைக்கைக்கு வழங்கியுள்ளார். சாவித்திரி சுமந்திரன் ஒரு கருவி மட்டுமே சுமந்திரன் தான் மதமாற்ற செயற்பாடுகளை முன் ஒன்று செயல்படுத்துகிறார். நாங்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல மத மாற்றி களுக்கு எதிரானவர்கள் என பல்வேறு ஊடக சந்திப்புகளில் வலியுறுத்தி வந்துள்ளேன். மதமாற்றி களுக்கு எதிராக சைவத்தை பாதுகாப்பதற்காக சுயேச்சை குழுவாக இலக்கம் 14 ஆமை சின்னத்தில் சிவ தொண்டர்கள் ஒன்பது பேர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 4 இலட்சம் சைவ வாக்காளர்கள் உள்ள நிலையில் எமது இனத்தையும் மதத்தையும் காப்பாற்றுவதற்காக ஆமை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.ஆகவே சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஏற்ற நபர் அல்ல அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழ் மக்கள் இனமாகவும் மதமாகவும் அழிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement