• Sep 19 2024

சுமந்திரன், சிறீதரன், செல்வம் - ரணிலின் நிகழ்வில் பங்கேற்றது ஏன் - பின்னணியில் இந்தியா.!

Tamil nila / Feb 12th 2023, 12:51 pm
image

Advertisement

இந்தியாவின் வேண்டுகோளுக்காகவே யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழாவிலும் பங்கேற்றிருந்ததாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் கலந்துகொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை என்று தமிழ் எம்.பிக்கள் தீர்மானித்திருந்தனர்.


இந்நிலையில் நேற்யை தினம் யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழாவிலும் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இறுதி வரையில் இருந்துள்ளனர்.


இருப்பினும், நேற்று முன்தினம் இரவு இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் நடைபெற்ற விருந்துபசாரத்துடனான சந்திப்பின் பின்னர் அந்த முடிவினை சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சந்திப்பின்போது, இணையமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தினை கையளிக்கும் வரலாற்று நிகழ்வில் அவர்களை பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதனை சாதகமாக பரிசீலிப்பதாக அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையிலேயே நேற்றைய யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழா நிகழ்வில் தமிழ் எம்.பி.க்கள் பங்கேற்றிருந்தனர்.


அதன்படி, அந்நிகழ்வில் சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சுமந்திரன், சிறீதரன், செல்வம் - ரணிலின் நிகழ்வில் பங்கேற்றது ஏன் - பின்னணியில் இந்தியா. இந்தியாவின் வேண்டுகோளுக்காகவே யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழாவிலும் பங்கேற்றிருந்ததாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் கலந்துகொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை என்று தமிழ் எம்.பிக்கள் தீர்மானித்திருந்தனர்.இந்நிலையில் நேற்யை தினம் யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழாவிலும் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இறுதி வரையில் இருந்துள்ளனர்.இருப்பினும், நேற்று முன்தினம் இரவு இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் நடைபெற்ற விருந்துபசாரத்துடனான சந்திப்பின் பின்னர் அந்த முடிவினை சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சந்திப்பின்போது, இணையமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தினை கையளிக்கும் வரலாற்று நிகழ்வில் அவர்களை பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை சாதகமாக பரிசீலிப்பதாக அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே நேற்றைய யாழ்ப்பாண கலாசார நிலையத் திறப்பு விழா நிகழ்வில் தமிழ் எம்.பி.க்கள் பங்கேற்றிருந்தனர்.அதன்படி, அந்நிகழ்வில் சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement