• Nov 14 2024

சாள்ஸ் நிர்மலநாதன் குறித்து சுமந்திரன் விடுத்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது! தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை விடுத்த கோரிக்கை

Chithra / Nov 8th 2024, 3:29 pm
image


வன்னி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால்  ஆசன நியமனம் வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறித்த கருத்தை அவர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்  என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு வேறு பல காரணங்களால் தேர்தலுக்கான ஆசன நியமனம் வழங்கப்படவில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தானது கட்சிக்குள் விமர்சனத்தையும், சலசலப்பையும், அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மந்த கதியில் காணப்பட்டது.

எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு

கட்சியின் ஆசன நியமனம் வழங்க மறுக்கப்பட்டது என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அவர் தானாகவே   தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.

சுமந்திரன் வேறு பல காரணங்களை முன்வைத்து சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விடுத்த கருத்தை  அவர்  மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது கட்சியின் நலனுக்கு உகந்ததாக  காணப்படும்.

அரசியல்வாதிகள் தமது நலனையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்வார்கள்.அது கட்சியின் நலனுக்கானதா? என்பதை காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.

 


சாள்ஸ் நிர்மலநாதன் குறித்து சுமந்திரன் விடுத்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை விடுத்த கோரிக்கை வன்னி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால்  ஆசன நியமனம் வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறித்த கருத்தை அவர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்  என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு வேறு பல காரணங்களால் தேர்தலுக்கான ஆசன நியமனம் வழங்கப்படவில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.குறித்த கருத்தானது கட்சிக்குள் விமர்சனத்தையும், சலசலப்பையும், அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மந்த கதியில் காணப்பட்டது.எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்குகட்சியின் ஆசன நியமனம் வழங்க மறுக்கப்பட்டது என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.அவர் தானாகவே   தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.சுமந்திரன் வேறு பல காரணங்களை முன்வைத்து சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விடுத்த கருத்தை  அவர்  மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது கட்சியின் நலனுக்கு உகந்ததாக  காணப்படும்.அரசியல்வாதிகள் தமது நலனையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்வார்கள்.அது கட்சியின் நலனுக்கானதா என்பதை காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும். என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement