• Apr 04 2025

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு..! ஜனாதிபதி அறிவிப்பு

Chithra / Jul 4th 2024, 10:45 am
image


இலங்கை யாப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மனுவில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு. ஜனாதிபதி அறிவிப்பு இலங்கை யாப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த மனுவில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now