• Sep 20 2024

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவு! தயாசிறி தரப்பு திட்டவட்டம்

Chithra / Jul 30th 2024, 3:13 pm
image

Advertisement

  

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

கரந்தெனியவில் இன்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பூரண அங்கீகாரமும் ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமது கட்சி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து மனிதநேய மக்கள் கூட்டணி இந்த புதிய தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சமன் பிரியந்த விஜேவிக்ரம விளக்கமளித்துள்ளார்.

இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பக்கூடிய தற்போதைய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்பதாலும் இந்நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவைச் சுற்றி மிக நெருக்கமாக இருப்பதாலும் தமது கட்சிக்கு இந்த தீர்மானத்தை எடுப்பது இலகுவானது எனவும் சமன் பிரியந்த விஜேவிக்ரம கூறியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக வருவார் என்று மக்கள் தீர்மானித்துள்ளதை தமது கட்சியும் தலைவணங்குவதாகவும் கட்சியின் தலைவர் தயாசிறி ஜயசேகரவுடன் கட்சியினரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் சமன் பிரியந்த விஜேவிக்ரம கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவு தயாசிறி தரப்பு திட்டவட்டம்   இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.கரந்தெனியவில் இன்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பூரண அங்கீகாரமும் ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமது கட்சி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து மனிதநேய மக்கள் கூட்டணி இந்த புதிய தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சமன் பிரியந்த விஜேவிக்ரம விளக்கமளித்துள்ளார்.இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பக்கூடிய தற்போதைய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்பதாலும் இந்நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவைச் சுற்றி மிக நெருக்கமாக இருப்பதாலும் தமது கட்சிக்கு இந்த தீர்மானத்தை எடுப்பது இலகுவானது எனவும் சமன் பிரியந்த விஜேவிக்ரம கூறியுள்ளார்.இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக வருவார் என்று மக்கள் தீர்மானித்துள்ளதை தமது கட்சியும் தலைவணங்குவதாகவும் கட்சியின் தலைவர் தயாசிறி ஜயசேகரவுடன் கட்சியினரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் சமன் பிரியந்த விஜேவிக்ரம கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement