• May 08 2024

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளர் தொடர்பில் சுரேந்திரன் கருத்து...!

Sharmi / Apr 2nd 2024, 10:17 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இக்கோரிக்கை, தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்துவிடும். இவ்வாறும் சில தமிழ் தரப்பினர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஒரே நிலைப்பாட்டில் செயற்படும் தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும். 

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளர் தொடர்பில் சுரேந்திரன் கருத்து. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ நடத்தியே ஆக வேண்டும்.இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.இக்கோரிக்கை, தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்துவிடும். இவ்வாறும் சில தமிழ் தரப்பினர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஒரே நிலைப்பாட்டில் செயற்படும் தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement