• Nov 15 2024

யாழில் இடம்பெற்ற சதுப்பு நில காடுகள் விழிப்புணர்வு தினம்..!

Sharmi / Jul 27th 2024, 10:15 am
image

இன்றைய இளம் சிறார் மத்தியில் சதுப்பு நில  காடுளைப் பேணலின் அவசியத்தை எடுத்துக் காட்டும் வகையில் 'நிகழ்நிலை வினாடி வினாப்போட்டி' ஒன்றை நடாத்தி அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு வட்டு இந்துக் கல்லூரி சோமசுந்தரப் புலவர் அரங்கில் இன்று(27) இடப்பெற்றது. 

இந்நிகழ்வை கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையும், Clean Ocean Forces மற்றும் எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடாத்தியிருந்தது.

இந் நிகழ்வில் பிரபல உயிரியல் ஆசான் S.V.குணசீலனும், கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி சதீஷ் அவர்களும், Clean Ocean Forces மற்றும் எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகம் சார்பில் மனோகரன் சசிகரனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அதிக மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றி வெற்றியாளர்களாகத் தெரிவு செய்த மாணவருக்கான கௌரவிப்பு நிகழ்வு, எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


யாழில் இடம்பெற்ற சதுப்பு நில காடுகள் விழிப்புணர்வு தினம். இன்றைய இளம் சிறார் மத்தியில் சதுப்பு நில  காடுளைப் பேணலின் அவசியத்தை எடுத்துக் காட்டும் வகையில் 'நிகழ்நிலை வினாடி வினாப்போட்டி' ஒன்றை நடாத்தி அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வு வட்டு இந்துக் கல்லூரி சோமசுந்தரப் புலவர் அரங்கில் இன்று(27) இடப்பெற்றது. இந்நிகழ்வை கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையும், Clean Ocean Forces மற்றும் எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடாத்தியிருந்தது.இந் நிகழ்வில் பிரபல உயிரியல் ஆசான் S.V.குணசீலனும், கடற்கரையோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி சதீஷ் அவர்களும், Clean Ocean Forces மற்றும் எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகம் சார்பில் மனோகரன் சசிகரனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.நிகழ்வில் குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அதிக மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.கிழக்கு மாகாணத்திலிருந்து பங்குபற்றி வெற்றியாளர்களாகத் தெரிவு செய்த மாணவருக்கான கௌரவிப்பு நிகழ்வு, எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement