• May 13 2024

பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் இலங்கை மாணவர்களுக்கு நீச்சல் போட்டி samugammedia

Chithra / Aug 1st 2023, 10:11 pm
image

Advertisement

திருகோணமலையில் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி  இன்று நடத்தப்பட்டுள்ளது.

TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாரான மாணவர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.  

திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்தி சென்றுள்ளனர்.

பதினாறு வயதுக்கு கீழ்பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்குபற்றியதுடன் 13 கிலோமீட்டர் தூரத்தை 5 மணித்தியாலங்களில் நீந்தியுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் ஆறு சிறார்கள் 13 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்ததும், சிம்மர் என்ற சிறுவன் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் இலங்கை மாணவர்களுக்கு நீச்சல் போட்டி samugammedia திருகோணமலையில் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி  இன்று நடத்தப்பட்டுள்ளது.TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாரான மாணவர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.  திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்தி சென்றுள்ளனர்.பதினாறு வயதுக்கு கீழ்பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்குபற்றியதுடன் 13 கிலோமீட்டர் தூரத்தை 5 மணித்தியாலங்களில் நீந்தியுள்ளனர்.காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் ஆறு சிறார்கள் 13 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்ததும், சிம்மர் என்ற சிறுவன் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement