• Feb 08 2025

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Tharmini / Feb 8th 2025, 3:35 pm
image

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில்  அவர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது நேற்றிரவு (07)  வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சாரதி, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில்  அவர் காயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது நேற்றிரவு (07)  வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பயணிகளை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த சாரதி, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement