• Jan 26 2025

அரிசி மற்றும் மின் மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள்! நளின் பண்டார வலியுறுத்து

Chithra / Jan 22nd 2025, 9:37 am
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் இதுவரை இரத்துச் செய்யய்படவில்லை எனவும் மதுபானசாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மதுபான சாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது.

ஒருசில நபர்களின் பெயர்களின் மறைமுகமாக வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை  உண்மையான பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.  

விநியோகிக்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யபபடவில்லை.  மதுபான சாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் கிளீன் ஸ்ரீ லங்கா  திட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்பதில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மத்தியில்  பிரச்சினை காணப்படுகிறது.

நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படுகின்றன. 

உதிரிபாகங்களை அகற்ற வேண்டுமாயின் முதலில் காலவகாசம் வழங்க வேண்டும். அதேபோன்று அவற்றை இறக்குமதி செய்வதையும் தடுக்க வேண்டும்.

அரிசி மாபியா, மின் மாபியா ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.

ஆனால் இதுவரை  எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாபியாக்களை இல்லாதொழிப்பதற்கு  கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துங்கள்.

பெருந்தோட்டப் பகுதியில் இன்றும் லயன் அறைகளில் தான் மக்கள் வாழ்கிறார்கள். 

முதலில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை  பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பாரக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

 

அரிசி மற்றும் மின் மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் நளின் பண்டார வலியுறுத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் இதுவரை இரத்துச் செய்யய்படவில்லை எனவும் மதுபானசாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மதுபான சாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது.ஒருசில நபர்களின் பெயர்களின் மறைமுகமாக வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை  உண்மையான பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.  விநியோகிக்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யபபடவில்லை.  மதுபான சாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.மேலும் கிளீன் ஸ்ரீ லங்கா  திட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்பதில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மத்தியில்  பிரச்சினை காணப்படுகிறது.நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படுகின்றன. உதிரிபாகங்களை அகற்ற வேண்டுமாயின் முதலில் காலவகாசம் வழங்க வேண்டும். அதேபோன்று அவற்றை இறக்குமதி செய்வதையும் தடுக்க வேண்டும்.அரிசி மாபியா, மின் மாபியா ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.ஆனால் இதுவரை  எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாபியாக்களை இல்லாதொழிப்பதற்கு  கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துங்கள்.பெருந்தோட்டப் பகுதியில் இன்றும் லயன் அறைகளில் தான் மக்கள் வாழ்கிறார்கள். முதலில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை  பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பாரக்கிறோம் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement