• Nov 21 2024

ஆசிரியரின் கைப்பேசியை பறித்துச் சென்று : சுன்னாகம் பொலிஸார் அராஜகம் - தீபன் திலீசன் கண்டனம்!

Tharmini / Nov 11th 2024, 11:14 am
image

சுன்னாகம் பொலிசாரின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

 நேற்று (10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சுன்னாகம் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றிருந்த வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிசார், ஹையேஸ் வாகனத்தில் வந்திருந்தவர்கள் மீது பெண்கள், ஆண்கள் என பார்க்காமல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் வீசியதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற வேளையில் எங்களுடைய ஆசிரியர் சங்கத்தின் வலிகாமம் வலையத்தினுடைய பிரதிநிதியான நவநீசன் அவர்கள் அந்த வழியால் வந்த பொழுது குறித்த சம்பவத்தை காணொளி எடுத்துள்ளார். இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராகிய பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிஸாரின் அராஜகத்தை காணொளியாக பதிவு செய்ய முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் என பெயர் எழுதப்பட்ட நீல நிற முச்சக்கர வண்டிகளில், சிவில் உடைகளில் வந்த பொலிசாரினால் அவரது தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அந்தப் பெண்மணி பதிவு செய்த சாதனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு பற்றைக்குள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நவநீசன் அவர்கள் தனது கைபேசி பொலிசாரினால் பறிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையிலும், இதுவரை அவரது கைப்பேசி கொடுக்கப்படவில்லை.

பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்து சென்று சில மணி நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையை சுன்னாகம் பொலிஸார் மீறுவதாக அமைந்துள்ளது.

ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இங்கே பொலிசாரின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தாலும் வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அராஜகங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம். 

ஆகவே எமது தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட கைப்பேசி மிக விரைவாக வழங்கப்பட வேண்டும். அநாகரிகமாகவும் அராஜகமாகவும் செய்யப்பட்ட பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த காலப்பகுதிக்குள் அவருடைய கைப்பேசி வழங்கப்படாவிட்டால் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆனது அதற்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும் என இந்த இடத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

ஆசிரியரின் கைப்பேசியை பறித்துச் சென்று : சுன்னாகம் பொலிஸார் அராஜகம் - தீபன் திலீசன் கண்டனம் சுன்னாகம் பொலிசாரின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.  நேற்று (10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சுன்னாகம் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றிருந்த வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிசார், ஹையேஸ் வாகனத்தில் வந்திருந்தவர்கள் மீது பெண்கள், ஆண்கள் என பார்க்காமல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் வீசியதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.இந்த சம்பவம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற வேளையில் எங்களுடைய ஆசிரியர் சங்கத்தின் வலிகாமம் வலையத்தினுடைய பிரதிநிதியான நவநீசன் அவர்கள் அந்த வழியால் வந்த பொழுது குறித்த சம்பவத்தை காணொளி எடுத்துள்ளார். இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராகிய பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிஸாரின் அராஜகத்தை காணொளியாக பதிவு செய்ய முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.இவ்வாறான சூழ்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் என பெயர் எழுதப்பட்ட நீல நிற முச்சக்கர வண்டிகளில், சிவில் உடைகளில் வந்த பொலிசாரினால் அவரது தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அந்தப் பெண்மணி பதிவு செய்த சாதனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு பற்றைக்குள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.நவநீசன் அவர்கள் தனது கைபேசி பொலிசாரினால் பறிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையிலும், இதுவரை அவரது கைப்பேசி கொடுக்கப்படவில்லை.பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்து சென்று சில மணி நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையை சுன்னாகம் பொலிஸார் மீறுவதாக அமைந்துள்ளது.ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இங்கே பொலிசாரின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தாலும் வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அராஜகங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம். ஆகவே எமது தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட கைப்பேசி மிக விரைவாக வழங்கப்பட வேண்டும். அநாகரிகமாகவும் அராஜகமாகவும் செய்யப்பட்ட பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறித்த காலப்பகுதிக்குள் அவருடைய கைப்பேசி வழங்கப்படாவிட்டால் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆனது அதற்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும் என இந்த இடத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement