• May 13 2025

பல சபைகளில் தலைமை பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு பேச்சுவார்த்தை; ரிசாட் எம்.பி தெரிவிப்பு

Chithra / May 12th 2025, 3:28 pm
image

 பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன்  கட்சியின் தலைமைத்துவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா பெரியாற்றுமுனை நகர சபைக்கு சொந்தமான கட்டடத்தில் இன்று  இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மது மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சில சபைகளில் பிரதி தவிசாளர்களை பெறுவதற்கும் சில சபைகளில் ஆட்சியின் பங்காளர்களாக இருப்பதற்கும் செயற்பட்டு வருகிறோம். 

குறிப்பாக வடகிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள வாக்களித்த மக்களுக்காக எமது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அதேபோல கட்சியினுடைய வேட்பாளர்கள் அரும்பாடுபட்டு தங்களுக்காகவும் கட்சிக்காகவும் ஒன்றுபட்டு வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

அதிகபட்ச ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள அது திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மன்னார் வவுனியா முல்லைத் தீவாக இருக்கலாம், இதில் ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம். 

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நல்ல சபைகளை உருவாக்கி அதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் உச்ச பயனை பெற்றுக் கொடுப்போம்.

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கான மாவட்ட தலைமைத்துவம் மற்றும் மத்திய குழு உள்ளிட்டவற்றை உயர்பீட ஒன்று கூடலின் பின்பு முடிவுகளை எடுப்போம்.

இம் முறை திருகோணமலை மாவட்டத்திற்கு உள்ளூராட்சி தேர்தல் நல்லதொரு முடிவுகளை பெற்று மாற்றம் கண்டுள்ளது. என்றார்.


பல சபைகளில் தலைமை பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு பேச்சுவார்த்தை; ரிசாட் எம்.பி தெரிவிப்பு  பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன்  கட்சியின் தலைமைத்துவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.கிண்ணியா பெரியாற்றுமுனை நகர சபைக்கு சொந்தமான கட்டடத்தில் இன்று  இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மது மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,சில சபைகளில் பிரதி தவிசாளர்களை பெறுவதற்கும் சில சபைகளில் ஆட்சியின் பங்காளர்களாக இருப்பதற்கும் செயற்பட்டு வருகிறோம். குறிப்பாக வடகிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள வாக்களித்த மக்களுக்காக எமது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அதேபோல கட்சியினுடைய வேட்பாளர்கள் அரும்பாடுபட்டு தங்களுக்காகவும் கட்சிக்காகவும் ஒன்றுபட்டு வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.அதிகபட்ச ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள அது திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மன்னார் வவுனியா முல்லைத் தீவாக இருக்கலாம், இதில் ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நல்ல சபைகளை உருவாக்கி அதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் உச்ச பயனை பெற்றுக் கொடுப்போம்.எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கான மாவட்ட தலைமைத்துவம் மற்றும் மத்திய குழு உள்ளிட்டவற்றை உயர்பீட ஒன்று கூடலின் பின்பு முடிவுகளை எடுப்போம்.இம் முறை திருகோணமலை மாவட்டத்திற்கு உள்ளூராட்சி தேர்தல் நல்லதொரு முடிவுகளை பெற்று மாற்றம் கண்டுள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement