எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது.
அந்த கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கூட்டம் முடிந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கும் வகையில் கட்சி ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் அந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.
எமது வேலைத்திட்டங்களை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகமானவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
கடந்த தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டவர்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டு, பொது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.
முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன மற்றும் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல ஆகியோர் கலந்துரையாடல்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு ஏகமனதாக அனுமது வழங்கியது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு சக்தியாக அரசாங்கத்துக்கு முகம்கொடுப்பதே எமது நோக்கம். எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் விரைவில் பேச்சுவார்த்தை; ரணில் தரப்பு ஏகமனதாக ஆதரவு எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது. அந்த கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.இந்நிலையில் கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.கூட்டம் முடிந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கும் வகையில் கட்சி ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் அந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது. எமது வேலைத்திட்டங்களை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்டு ஐக்கியமாக செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகமானவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.கடந்த தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டவர்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டு, பொது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன மற்றும் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல ஆகியோர் கலந்துரையாடல்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு ஏகமனதாக அனுமது வழங்கியது.எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு சக்தியாக அரசாங்கத்துக்கு முகம்கொடுப்பதே எமது நோக்கம். எனவும் அவர் தெரிவித்தார்.