• May 17 2024

அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளரை சந்தித்த தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள்!

Chithra / Feb 1st 2023, 2:14 pm
image

Advertisement

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டிற்கும், எதிர்கட்சிகளிலுள்ள சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இனப் பிரச்சினை தொடர்பான நல்லிணக்கத்தின் நம்பிக்கை மற்றும் அரசியல் தீர்வுகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எவ்வாறு அமெரிக்கா உதவலாம் என்பது குறித்தும், அதிகார பகிர்வு, நல்லிணக்கம் குறிக்கும் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், மனோ கணேசன், கஜேந்திரகுமார், சுமந்திரன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளரை சந்தித்த தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டிற்கும், எதிர்கட்சிகளிலுள்ள சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இனப் பிரச்சினை தொடர்பான நல்லிணக்கத்தின் நம்பிக்கை மற்றும் அரசியல் தீர்வுகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.சிறுபான்மை அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எவ்வாறு அமெரிக்கா உதவலாம் என்பது குறித்தும், அதிகார பகிர்வு, நல்லிணக்கம் குறிக்கும் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறுகின்றார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், மனோ கணேசன், கஜேந்திரகுமார், சுமந்திரன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement