• Apr 24 2025

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடலாம்: நண்பர்களை வரவேற்கிறேன் - மனோ எம்பி தெரிவிப்பு!

Chithra / Mar 10th 2025, 7:23 am
image


எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில்  போட்டியிடுவது தொடர்பில்  பேச்சுக்கள் இடம் பெற்று வரும் நிலையில்  கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிட்டால்  உங்களுடைய  கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமா என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழரசு கட்சியை கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை .

இலங்கையில் கட்சிகள் என்ற வகையில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், போட்டியிடாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. அவர்கள் எங்களுடைய நண்பர்கள் அவர்களை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடலாம்: நண்பர்களை வரவேற்கிறேன் - மனோ எம்பி தெரிவிப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில்  போட்டியிடுவது தொடர்பில்  பேச்சுக்கள் இடம் பெற்று வரும் நிலையில்  கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிட்டால்  உங்களுடைய  கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமா என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியை கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை .இலங்கையில் கட்சிகள் என்ற வகையில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், போட்டியிடாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.அந்த வகையில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. அவர்கள் எங்களுடைய நண்பர்கள் அவர்களை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement