• Nov 28 2024

ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் தமிழ் தலைவர்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்...!samugammedia

Anaath / Dec 31st 2023, 7:45 pm
image

இந்த காலகட்டத்தில் எல்லா கட்சிகளும் மத்தியிலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் இவர் ஜனாதிபதி வேட்பாளர் சிலர் நான்தான் ஜனாதிபதி வேட்பாளராக வரப் போகின்றேன் நான் தான் கேட்கப் போகின்றேன் என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும்  ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட்ட நிலையில்  இதன் ஆரம்ப பணியை  கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்ப பணியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இதற்கென முதல்கட்டமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக கிழக்கு மாகாண ஆளுனரினால் 10இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஸான் தலைமையில் நடைபெற்றபோது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் மற்றும் மண்முனை வடக்கு,மண்முனை மேற்கு பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ந்திரன் தெரிவிப்பு 

ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயற்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் செய்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்க்கும் நிகழ்விலேயே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் உரையாற்றிய இராஜங்க அமைச்சர்,

கடந்த 2019 ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குதலினால் சீயோன் தேவாலயம் முற்று முழுதாக சேதமாகப்பட்டதோடு மட்டுமல்லாது சுமார் 30க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாக்கப்பட்டது அந்த இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தார்கள் பலர் காயப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்து உயிரிழந்தவர்கள் உண்டு இன்றும் பலர் காயங்களோடு ஆறாத வடுக்கலோடு அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் சீயோன் தேவாலயத்திலே இந்த பயங்கரவாத குண்டு தாக்குதல் நடந்தது உங்களுக்கு தெரியும் 2023 என்கின்ற போது நான்கு வருடங்கள் கடந்துள்ளது இந்த நிலையில் சீயோன் தேவாலயத்தின் உடைய புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணப்பாடு தொடர்ச்சியாக இருந்து வந்தது இருந்த போதிலும் கடந்த காலங்களில் இது சம்பந்தமான முயற்சிகளை முன்னெடுத்து வந்தோம் அந்த அடிப்படையில் ஒன்றாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களிடம் இந்த பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்கின்ற அடிப்படையில் இது தொடர்பாக அவரோடு பேசி இருந்தேன் இவ்வாறாவது மத்திக்குள்ளால் நாங்களும் முயற்சி எடுக்கின்றோம் மாகாணத்துக்குள்ளாகவும் இந்த வேலை திட்டத்தை செய்ய வேண்டும் என்று.

அந்த அடிப்படையில் நானும் அவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஆலயத்தை வந்து பார்வையிட்டோம் வணக்கத்திற்குரிய போதகர் ரொசான் அவர்களுடன் நிர்வாகத்தினருடனும் இணைந்து பார்வையிட்டு கிட்டத்தட்ட மாகாண மட்டத்திலே 32 மில்லியன் இதற்கான எஸ்டிமேட் செய்யப்பட்டது இருந்தபோதிலும் முதல் கட்டமாக ஒரு சிறு அளவிலான நிதி தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது தரையை செய்வதற்கு.

இருப்பினும் இதற்கு முழுமையான நிதி எங்களுக்கு தேவைப்பாடு இருக்கின்றது ஆகவே வருகின்ற வருடம் மத்திய அரசுக்கு உள்ளாலும் சில முன்மொழிவுகளை வைத்திருக்கின்றேன் நிதிகளை கொண்டு வருவதற்கு அதோடு மாகாணத்துக்குள்ளும் ஆளுநருக்கூடாகவும் நிதிகளை கொண்டு வந்து எமது தேவாலயத்தை முற்று முழுதாக புணரமைப்புச்செய்து அங்கு நடைபெற்றதான வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கு வழி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சிகளை முன்னெடுக்கின்றோம்.

இயேசு பெருமானுடைய போதனையின்படி மன்னிக்க வேண்டும் ஆனால் நடந்த சம்பவங்களை மறக்க முடியாது ஏனென்றால் பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பெரியோர்கள் வரை எல்லோருமே இந்த இடத்திலே வெடித்து சிதறினார்கள் ஏனென்றால் அந்த சம்பவம் இடம்பெற்ற உடனேயே இந்த ஸ்தலத்திற்கே உடனடியாக ஓடி வந்தவன் அவ்வாறு ஒரு மிக பயங்கரமான துயரச் சம்பவம் இடம்பெற்றது இருந்தபோதிலும் இன்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது இதற்குப் பிறகு இந்த இடத்திலேயே குண்டு தாக்குதலை மேற்கொண்ட முகமத் ஆசான் என்பவர் உங்களுக்கு தெரியும் அவருடைய உடற்பாகங்களை கூட கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தார்கள்.

இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆனால் அவருடைய உடற்பாகங்களை கொண்டு மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மாயானத்தில் புதைத்தார்கள் அவ்வாறு புதைத்த போது அது ஒரு இந்துமயானத்திலேயே எங்களுடைய மாநகர எல்லைக்கு உள்ளே இந்த பயங்கரவாதியின் உடலை புதைத்தல் தொடர்பாக மக்கள் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள் நாங்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தோம் கலந்து கொண்டதன் நிமித்தம் உங்களுக்கு தெரியும் போலீசாரால் தாக்கப்பட்டு  நான்கு பேர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்தார்கள் அதன் பிற்பாடு ஐந்து பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அந்த வழக்கு போலீசார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்றது சுமார் மூன்று வருடங்களை பிற்பாடு அந்த வழக்கில் இருந்து நாங்கள் விடுதலை ஆகியிருக்கின்றோம்.

அந்த உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்துங்கள் என்று ஆர்ப்பாட்டங்களை செய்ததற்காக அது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதன் பிற்பாடு நீதிமன்றம் நீதிபதி அவர்கள் அதை செவிமடுத்து உண்மையிலேயே அங்கிருந்த பயங்கரவாதியின் உடற்பயங்களை உண்மையாக தோண்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது ஆகவே உண்மையிலேயே அந்தப் போராட்டம் ஒரு வெற்றி பெற்ற போராட்டம் இப்போது ஆலயத்தினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்ப கட்டத்தில் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.

எதுவிதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை இதுவரையில் அரசாங்கத்தை பொறுத்த அளவுக்கு உங்களுக்கு தெரியும் நாட்டினுடைய ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசாங்கமோ தற்போது இருக்கின்ற பொருளாதார பிரச்சினையை சீர்படுத்திக் கொண்டு இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை எழுச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக வேலைத்திட்டங்களை தான் தற்பொழுது முன்னெடுத்து கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லா கட்சிகளும் மத்தியிலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் இவர் ஜனாதிபதி வேட்பாளர் சிலர் நான்தான் ஜனாதிபதி வேட்பாளராக வரப் போகின்றேன் நான் தான் கேட்கப் போகின்றேன் என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது எது எவ்வாறாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றது பாராளுமன்ற தேர்தலுக்கும் இன்னமும் காலங்கள் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் காண காலங்கள் இருப்பதினால் அதற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் இருக்கின்றது ஆகவே அது தொடர்பாக அரசாங்க தரப்பில் எது விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதனை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

உண்மையில் ஒரு தமிழ் வேட்பாளரை நாம் நியமித்து இந்த நாடு உங்களுக்கு தெரியும் காலகாலமாக இனவாத போக்கோடு செயல்படுகின்ற ஒரு நாடு நிச்சயமாக இந்த நாட்டில் தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாம் எதை சாதிக்க முடியும் எமது மக்கள் சார்பாக.

எமது தமிழ் மக்கள் சார்பாக ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாங்கள் ஜனாதிபதியாக அவரை கொண்டு வர முடியுமா என்பதனை சிந்திக்க வேண்டும் இது முதலாவது.

இரண்டாவது இப்போது உங்களுக்கு தெரியும் சில நேரங்களில் எமது தமிழ் தரப்புகள் விடுகின்ற பிழைகள் என்ன என்றால் யார் ஒரு ஜனாதிபதியின் தேர்தலில் தோற்பாரோ அவருக்கு ஆதரிப்பை வழங்குவது தோற்பார் எனத் தெரியும் சாதாரண மக்களுக்கு விளங்கும் இவர் வெல்லுவார் இவர் கோட்பார் என்று தெரிந்தும் சில பேருக்கு சென்று அதாவது ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டுவது போன்று அவ்வாறானவர்களுக்கு ஆதரவினை வழங்கி கடைசியில் வெற்றி பெறும் ஜனாதிபதியுடன் பேசி எதையும் செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு செல்வது வழமை.

ஆனால் தமிழ் தரப்புகள் பல்வேறுபட்ட கட்சிகள் இருந்தாலும் பல கொள்கை கோட்பாடுகளோடு பயணித்தாலும் இந்த நாட்டில் எப்படி பார்த்தாலும் சிங்கள மக்களை மையப்படுத்திய ஒருவர்தான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் தான் ஜனாதிபதியாக வர போகின்றார் ஆகவே இந்த நேரத்தில் தான் தமிழ் தலைமைகள் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டும் ஜனாதிபதியாக வர சாத்தியமாக உள்ள ஒருவரோடு நாங்கள் பேச வேண்டும் ஒருமித்த குரலிலே எல்லோரும் பேசி எமது மக்களுக்கு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளாக இருக்கலாம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களாக இருக்கலாம் உடனடியாக ஆற்ற வேண்டிய விடயங்களாக இருக்கலாம் நீண்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டிய விடயங்களாக இருக்கலாம் ஒவ்வாறாக இருந்தாலும் இது தொடர்பாக நாங்கள் தீர்க்கமாக கலந்த ஆலோசித்து அதில் ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதன் பிற்பாடு நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கி எங்களது மக்கள் நிழல் சார்ந்த விடயங்களை நாங்கள் செய்து சாதித்துக் கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு நிச்சயமாக தோற்பார் என்று நிற்கின்ற ஒருவரிடம் சென்று அவருக்கு ஆதரவு வழங்கி கடைசியாக மக்களுக்கு எதுவுமே தாங்கள் பெற்றுக் கொடுக்காமல் போவது என்பது அல்லது ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயமாக தமிழ் தரப்பில்லோ கடந்த காலத்தில் மட்டக்களப்பில் ஒருவர் முஸ்லிம் தரப்பில் கூறினார் நான் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஒருவர் என்று தேர்தலில் போட்டியிட்டார் கடைசியில் என்ன நடந்தது அவர் தீர்மானித்தாரா அவரது வாக்கு எதற்கும் பயன்பட்டது ஒன்றுமில்லை அவ்வாறான பிழையான முடிவுகளை எடுத்து நாங்கள் எங்களுடைய இனத்துக்கு பாதகமான விடயங்களை செய்ய முடியாது.

காலம் காலமாக இந்த நாட்டை ஆண்டு வந்த அரசாங்கங்கள் பொருட்களின் விலைகளை ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துத்தான் வந்துள்ளது ஒவ்வொரு காலகட்டங்களிலும் தமிழ் தலைமைகளும் 2015ல் கூட அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலைமை இருந்தமை அனைவருக்கும் நன்றாகத் தெரியும் ஆனால் உங்களுக்கு தெரியும் நாடு இப்போது அகல பாதாளத்திற்கு விழுந்தது பொருளாதார வீழ்ச்சி இப்போது ஐ.எம்.எப்பினுடைய நிதி பெற்றுக் கொள்வதற்கு சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் என்பது உண்மையில் வரி என்ற விடயத்தில் தங்கி இருக்கின்றது ஆகவே இது தொடர்பாக நாங்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம் ஆனால் ஐ.எம்.எப் இனுடைய சில நிபந்தனைகள் உள்ளது நிதி வளங்களை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு நிச்சயமாக இந்த வரிகளை குறைத்து மக்களுடைய வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம் என்கின்ற உறுதிப்பாட்டோடு அரசாங்கம் பயணிக்கின்றது.

நிச்சயமாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் அதற்கான அழுத்தங்களை அரசு தரப்பில் இருக்கின்ற நாங்களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் ஏனென்றால் நாங்களும் மக்கள் பிரதிநிதி எங்களை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் ஆகவே அவர்களுக்கான சுமைகள் என்பது வெகுவாக குறைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்கின்றோம் ஆகவே இந்த நிதியை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு இந்த வரிகளை குறைத்து பொருட்களின் விலைகளை குறைத்து மக்களின் வாழ்க்கை சுமையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். என தெரிவித்துள்ளார்.

ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் தமிழ் தலைவர்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.samugammedia இந்த காலகட்டத்தில் எல்லா கட்சிகளும் மத்தியிலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் இவர் ஜனாதிபதி வேட்பாளர் சிலர் நான்தான் ஜனாதிபதி வேட்பாளராக வரப் போகின்றேன் நான் தான் கேட்கப் போகின்றேன் என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும்  ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட்ட நிலையில்  இதன் ஆரம்ப பணியை  கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன் ஆரம்ப பணியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.இதற்கென முதல்கட்டமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக கிழக்கு மாகாண ஆளுனரினால் 10இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்வானது சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஸான் தலைமையில் நடைபெற்றபோது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார்.இந்த நிகழ்வில் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் மற்றும் மண்முனை வடக்கு,மண்முனை மேற்கு பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.ந்திரன் தெரிவிப்பு ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயற்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் செய்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்க்கும் நிகழ்விலேயே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.இதன் உரையாற்றிய இராஜங்க அமைச்சர்,கடந்த 2019 ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குதலினால் சீயோன் தேவாலயம் முற்று முழுதாக சேதமாகப்பட்டதோடு மட்டுமல்லாது சுமார் 30க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாக்கப்பட்டது அந்த இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தார்கள் பலர் காயப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்து உயிரிழந்தவர்கள் உண்டு இன்றும் பலர் காயங்களோடு ஆறாத வடுக்கலோடு அவர்கள் இருக்கின்றார்கள்.இந்த நிலையில் சீயோன் தேவாலயத்திலே இந்த பயங்கரவாத குண்டு தாக்குதல் நடந்தது உங்களுக்கு தெரியும் 2023 என்கின்ற போது நான்கு வருடங்கள் கடந்துள்ளது இந்த நிலையில் சீயோன் தேவாலயத்தின் உடைய புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணப்பாடு தொடர்ச்சியாக இருந்து வந்தது இருந்த போதிலும் கடந்த காலங்களில் இது சம்பந்தமான முயற்சிகளை முன்னெடுத்து வந்தோம் அந்த அடிப்படையில் ஒன்றாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களிடம் இந்த பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்கின்ற அடிப்படையில் இது தொடர்பாக அவரோடு பேசி இருந்தேன் இவ்வாறாவது மத்திக்குள்ளால் நாங்களும் முயற்சி எடுக்கின்றோம் மாகாணத்துக்குள்ளாகவும் இந்த வேலை திட்டத்தை செய்ய வேண்டும் என்று.அந்த அடிப்படையில் நானும் அவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஆலயத்தை வந்து பார்வையிட்டோம் வணக்கத்திற்குரிய போதகர் ரொசான் அவர்களுடன் நிர்வாகத்தினருடனும் இணைந்து பார்வையிட்டு கிட்டத்தட்ட மாகாண மட்டத்திலே 32 மில்லியன் இதற்கான எஸ்டிமேட் செய்யப்பட்டது இருந்தபோதிலும் முதல் கட்டமாக ஒரு சிறு அளவிலான நிதி தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது தரையை செய்வதற்கு.இருப்பினும் இதற்கு முழுமையான நிதி எங்களுக்கு தேவைப்பாடு இருக்கின்றது ஆகவே வருகின்ற வருடம் மத்திய அரசுக்கு உள்ளாலும் சில முன்மொழிவுகளை வைத்திருக்கின்றேன் நிதிகளை கொண்டு வருவதற்கு அதோடு மாகாணத்துக்குள்ளும் ஆளுநருக்கூடாகவும் நிதிகளை கொண்டு வந்து எமது தேவாலயத்தை முற்று முழுதாக புணரமைப்புச்செய்து அங்கு நடைபெற்றதான வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கு வழி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சிகளை முன்னெடுக்கின்றோம்.இயேசு பெருமானுடைய போதனையின்படி மன்னிக்க வேண்டும் ஆனால் நடந்த சம்பவங்களை மறக்க முடியாது ஏனென்றால் பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பெரியோர்கள் வரை எல்லோருமே இந்த இடத்திலே வெடித்து சிதறினார்கள் ஏனென்றால் அந்த சம்பவம் இடம்பெற்ற உடனேயே இந்த ஸ்தலத்திற்கே உடனடியாக ஓடி வந்தவன் அவ்வாறு ஒரு மிக பயங்கரமான துயரச் சம்பவம் இடம்பெற்றது இருந்தபோதிலும் இன்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது இதற்குப் பிறகு இந்த இடத்திலேயே குண்டு தாக்குதலை மேற்கொண்ட முகமத் ஆசான் என்பவர் உங்களுக்கு தெரியும் அவருடைய உடற்பாகங்களை கூட கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தார்கள்.இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆனால் அவருடைய உடற்பாகங்களை கொண்டு மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மாயானத்தில் புதைத்தார்கள் அவ்வாறு புதைத்த போது அது ஒரு இந்துமயானத்திலேயே எங்களுடைய மாநகர எல்லைக்கு உள்ளே இந்த பயங்கரவாதியின் உடலை புதைத்தல் தொடர்பாக மக்கள் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள் நாங்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தோம் கலந்து கொண்டதன் நிமித்தம் உங்களுக்கு தெரியும் போலீசாரால் தாக்கப்பட்டு  நான்கு பேர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்தார்கள் அதன் பிற்பாடு ஐந்து பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அந்த வழக்கு போலீசார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்றது சுமார் மூன்று வருடங்களை பிற்பாடு அந்த வழக்கில் இருந்து நாங்கள் விடுதலை ஆகியிருக்கின்றோம்.அந்த உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்துங்கள் என்று ஆர்ப்பாட்டங்களை செய்ததற்காக அது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதன் பிற்பாடு நீதிமன்றம் நீதிபதி அவர்கள் அதை செவிமடுத்து உண்மையிலேயே அங்கிருந்த பயங்கரவாதியின் உடற்பயங்களை உண்மையாக தோண்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது ஆகவே உண்மையிலேயே அந்தப் போராட்டம் ஒரு வெற்றி பெற்ற போராட்டம் இப்போது ஆலயத்தினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்ப கட்டத்தில் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.எதுவிதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை இதுவரையில் அரசாங்கத்தை பொறுத்த அளவுக்கு உங்களுக்கு தெரியும் நாட்டினுடைய ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசாங்கமோ தற்போது இருக்கின்ற பொருளாதார பிரச்சினையை சீர்படுத்திக் கொண்டு இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை எழுச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக வேலைத்திட்டங்களை தான் தற்பொழுது முன்னெடுத்து கொண்டு வருகின்றார்கள்.ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லா கட்சிகளும் மத்தியிலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் இவர் ஜனாதிபதி வேட்பாளர் சிலர் நான்தான் ஜனாதிபதி வேட்பாளராக வரப் போகின்றேன் நான் தான் கேட்கப் போகின்றேன் என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது எது எவ்வாறாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றது பாராளுமன்ற தேர்தலுக்கும் இன்னமும் காலங்கள் இருக்கின்றது.ஜனாதிபதி தேர்தல் காண காலங்கள் இருப்பதினால் அதற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் இருக்கின்றது ஆகவே அது தொடர்பாக அரசாங்க தரப்பில் எது விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதனை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.உண்மையில் ஒரு தமிழ் வேட்பாளரை நாம் நியமித்து இந்த நாடு உங்களுக்கு தெரியும் காலகாலமாக இனவாத போக்கோடு செயல்படுகின்ற ஒரு நாடு நிச்சயமாக இந்த நாட்டில் தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாம் எதை சாதிக்க முடியும் எமது மக்கள் சார்பாக.எமது தமிழ் மக்கள் சார்பாக ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாங்கள் ஜனாதிபதியாக அவரை கொண்டு வர முடியுமா என்பதனை சிந்திக்க வேண்டும் இது முதலாவது.இரண்டாவது இப்போது உங்களுக்கு தெரியும் சில நேரங்களில் எமது தமிழ் தரப்புகள் விடுகின்ற பிழைகள் என்ன என்றால் யார் ஒரு ஜனாதிபதியின் தேர்தலில் தோற்பாரோ அவருக்கு ஆதரிப்பை வழங்குவது தோற்பார் எனத் தெரியும் சாதாரண மக்களுக்கு விளங்கும் இவர் வெல்லுவார் இவர் கோட்பார் என்று தெரிந்தும் சில பேருக்கு சென்று அதாவது ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டுவது போன்று அவ்வாறானவர்களுக்கு ஆதரவினை வழங்கி கடைசியில் வெற்றி பெறும் ஜனாதிபதியுடன் பேசி எதையும் செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு செல்வது வழமை.ஆனால் தமிழ் தரப்புகள் பல்வேறுபட்ட கட்சிகள் இருந்தாலும் பல கொள்கை கோட்பாடுகளோடு பயணித்தாலும் இந்த நாட்டில் எப்படி பார்த்தாலும் சிங்கள மக்களை மையப்படுத்திய ஒருவர்தான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் தான் ஜனாதிபதியாக வர போகின்றார் ஆகவே இந்த நேரத்தில் தான் தமிழ் தலைமைகள் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டும் ஜனாதிபதியாக வர சாத்தியமாக உள்ள ஒருவரோடு நாங்கள் பேச வேண்டும் ஒருமித்த குரலிலே எல்லோரும் பேசி எமது மக்களுக்கு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளாக இருக்கலாம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களாக இருக்கலாம் உடனடியாக ஆற்ற வேண்டிய விடயங்களாக இருக்கலாம் நீண்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டிய விடயங்களாக இருக்கலாம் ஒவ்வாறாக இருந்தாலும் இது தொடர்பாக நாங்கள் தீர்க்கமாக கலந்த ஆலோசித்து அதில் ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதன் பிற்பாடு நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கி எங்களது மக்கள் நிழல் சார்ந்த விடயங்களை நாங்கள் செய்து சாதித்துக் கொள்ள வேண்டும்.அதை விட்டுவிட்டு நிச்சயமாக தோற்பார் என்று நிற்கின்ற ஒருவரிடம் சென்று அவருக்கு ஆதரவு வழங்கி கடைசியாக மக்களுக்கு எதுவுமே தாங்கள் பெற்றுக் கொடுக்காமல் போவது என்பது அல்லது ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயமாக தமிழ் தரப்பில்லோ கடந்த காலத்தில் மட்டக்களப்பில் ஒருவர் முஸ்லிம் தரப்பில் கூறினார் நான் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஒருவர் என்று தேர்தலில் போட்டியிட்டார் கடைசியில் என்ன நடந்தது அவர் தீர்மானித்தாரா அவரது வாக்கு எதற்கும் பயன்பட்டது ஒன்றுமில்லை அவ்வாறான பிழையான முடிவுகளை எடுத்து நாங்கள் எங்களுடைய இனத்துக்கு பாதகமான விடயங்களை செய்ய முடியாது.காலம் காலமாக இந்த நாட்டை ஆண்டு வந்த அரசாங்கங்கள் பொருட்களின் விலைகளை ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துத்தான் வந்துள்ளது ஒவ்வொரு காலகட்டங்களிலும் தமிழ் தலைமைகளும் 2015ல் கூட அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலைமை இருந்தமை அனைவருக்கும் நன்றாகத் தெரியும் ஆனால் உங்களுக்கு தெரியும் நாடு இப்போது அகல பாதாளத்திற்கு விழுந்தது பொருளாதார வீழ்ச்சி இப்போது ஐ.எம்.எப்பினுடைய நிதி பெற்றுக் கொள்வதற்கு சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிபந்தனைகள் என்பது உண்மையில் வரி என்ற விடயத்தில் தங்கி இருக்கின்றது ஆகவே இது தொடர்பாக நாங்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம் ஆனால் ஐ.எம்.எப் இனுடைய சில நிபந்தனைகள் உள்ளது நிதி வளங்களை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு நிச்சயமாக இந்த வரிகளை குறைத்து மக்களுடைய வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம் என்கின்ற உறுதிப்பாட்டோடு அரசாங்கம் பயணிக்கின்றது.நிச்சயமாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் அதற்கான அழுத்தங்களை அரசு தரப்பில் இருக்கின்ற நாங்களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் ஏனென்றால் நாங்களும் மக்கள் பிரதிநிதி எங்களை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் ஆகவே அவர்களுக்கான சுமைகள் என்பது வெகுவாக குறைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்கின்றோம் ஆகவே இந்த நிதியை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு இந்த வரிகளை குறைத்து பொருட்களின் விலைகளை குறைத்து மக்களின் வாழ்க்கை சுமையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement