• Sep 19 2024

வலி வடக்கு தையிட்டி விகாரை விவகாரம்- மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த தமிழ் எம்.பிக்கள்...!samugammedia

Sharmi / May 4th 2023, 10:40 am
image

Advertisement

யாழ் மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சரும், மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் வடமாகாண ஆளுநருமான ஜீவன் தியாகராஜா உட்பட யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளும்இ பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும்,பாதுகாப்பு படைகளின் மாவட்டத்திற்கான உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன், அங்கஜன் மற்றும் வடக்கு அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோர் தையிட்டி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.








வலி வடக்கு தையிட்டி விகாரை விவகாரம்- மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த தமிழ் எம்.பிக்கள்.samugammedia யாழ் மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சரும், மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.இன்றைய அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் வடமாகாண ஆளுநருமான ஜீவன் தியாகராஜா உட்பட யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளும்இ பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும்,பாதுகாப்பு படைகளின் மாவட்டத்திற்கான உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.இந்நிலையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன், அங்கஜன் மற்றும் வடக்கு அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோர் தையிட்டி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement