• Jan 16 2025

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள்; கைதுகளை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை!

Chithra / Dec 12th 2024, 7:51 am
image

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் இந்திய விஜயத்தின் போது இந்திய - இலங்கை கடற்றொழில் பிரச்சினை உட்பட இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கடற்றொழிலாளர்கள் இந்த நாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் வடக்கில் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதன்படி, இரு தரப்பினரும் இணங்கக்கூடிய தீர்வை விரைவாக எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள்; கைதுகளை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்  தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் இந்திய விஜயத்தின் போது இந்திய - இலங்கை கடற்றொழில் பிரச்சினை உட்பட இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கடற்றொழிலாளர்கள் இந்த நாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் வடக்கில் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.இதன்படி, இரு தரப்பினரும் இணங்கக்கூடிய தீர்வை விரைவாக எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement