• May 04 2024

தொப்புள்கொடி உறவெனக் கூறி கடலினை தட்டிச்செல்ல எத்தனிக்கும் தமிழக மீனவர்கள்- சுப்பிரமணியம் சீற்றம் ! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 5:07 pm
image

Advertisement

வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் எமது கடலினை அந்நிய நாட்டிற்கு தாரைவார்க்கும் பட்சத்தில் மாகாணங்கள் மற்றும் தொழில்களினை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று 

அகில இலங்கை சமூகங்களின்  கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.பி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


அண்மையில் சமூக ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் குறிப்பிடுகையில், 


வடபகுதியிலுள்ள மீனவர்கள் கடும் துயரினை எட்டியுள்ளார்கள். இந்நிலையில் ஏகாதிபத்திய அரசாங்கம் அடக்கி ஒடுக்கி தமிழ் மக்களினை நசுக்கி இனத்தினை அளிக்கும் வேலை திட்டத்தினை தொடர்ந்தும் மேற்கொள்ளுகின்றது.


எம்முடைய கடலினை அந்நிய நாட்டிற்கு தாரைவார்த்து தொழில் செய்யமுடியாதவாறு வாழ்வாதாரத்தினை சுருக்கி பட்டினிச்சாவினை தழுவ செயற்பட்டுள்ளது. 


பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அரசாங்கம்  அவ் தொழிலை நிறுத்துவதாக கூறியும் மீண்டும் தொப்புள் கோடி உறவென கூறும் தமிழ் நாட்டு மீனவர்கள் எமது நிலையறிந்தும் இலங்கையரசாங்கம் வழங்கும்  போது கடலினை தட்டிச்செல்ல தயாராகவுள்ளார்கள். 


தொடர்ந்தும்  போராட்டங்கள் மேற்கொண்டாலும் அவை பலனற்று போகும் என்ற சூழலினை உருவாக்குகின்றார்கள். என்ன தான் அவர்கள் செய்தாலும் நாம் சளைத்தவர்களல்ல. 


எமது கடலானது வேறு நாட்டிற்கு தாரைவார்க்கும் பட்சத்தில் எமது கடல் வளத்தினையும், வளவதாரத்தினையும்  பாதுகாக்க தொடர்ந்தும் போராடுவோம். 


இந்த தடவை ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு சாதகமான பதில் கிடைக்கா விடில், 

மாகாணத்தினை முடக்கி தொழில்களினையும் நிறுத்தி பாரிய ஆர்பாட்டத்தினை முன்னெடுப்போம். 

இது தலைநகர் மற்றும் நகர் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.

தொப்புள்கொடி உறவெனக் கூறி கடலினை தட்டிச்செல்ல எத்தனிக்கும் தமிழக மீனவர்கள்- சுப்பிரமணியம் சீற்றம் SamugamMedia வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் எமது கடலினை அந்நிய நாட்டிற்கு தாரைவார்க்கும் பட்சத்தில் மாகாணங்கள் மற்றும் தொழில்களினை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அகில இலங்கை சமூகங்களின்  கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.பி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.அண்மையில் சமூக ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடபகுதியிலுள்ள மீனவர்கள் கடும் துயரினை எட்டியுள்ளார்கள். இந்நிலையில் ஏகாதிபத்திய அரசாங்கம் அடக்கி ஒடுக்கி தமிழ் மக்களினை நசுக்கி இனத்தினை அளிக்கும் வேலை திட்டத்தினை தொடர்ந்தும் மேற்கொள்ளுகின்றது.எம்முடைய கடலினை அந்நிய நாட்டிற்கு தாரைவார்த்து தொழில் செய்யமுடியாதவாறு வாழ்வாதாரத்தினை சுருக்கி பட்டினிச்சாவினை தழுவ செயற்பட்டுள்ளது. பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அரசாங்கம்  அவ் தொழிலை நிறுத்துவதாக கூறியும் மீண்டும் தொப்புள் கோடி உறவென கூறும் தமிழ் நாட்டு மீனவர்கள் எமது நிலையறிந்தும் இலங்கையரசாங்கம் வழங்கும்  போது கடலினை தட்டிச்செல்ல தயாராகவுள்ளார்கள். தொடர்ந்தும்  போராட்டங்கள் மேற்கொண்டாலும் அவை பலனற்று போகும் என்ற சூழலினை உருவாக்குகின்றார்கள். என்ன தான் அவர்கள் செய்தாலும் நாம் சளைத்தவர்களல்ல. எமது கடலானது வேறு நாட்டிற்கு தாரைவார்க்கும் பட்சத்தில் எமது கடல் வளத்தினையும், வளவதாரத்தினையும்  பாதுகாக்க தொடர்ந்தும் போராடுவோம். இந்த தடவை ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு சாதகமான பதில் கிடைக்கா விடில், மாகாணத்தினை முடக்கி தொழில்களினையும் நிறுத்தி பாரிய ஆர்பாட்டத்தினை முன்னெடுப்போம். இது தலைநகர் மற்றும் நகர் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement