• Nov 28 2024

சுமந்திரன் தமிழரசு கட்சியின் தலைவரானால் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு - முன்னாள் எம்.பி யோகேஸ்வரன்..!samugammedia

mathuri / Jan 18th 2024, 7:37 pm
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான  சட்டத்தரணி எம். எ .சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் தமிழ்தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்த நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு தேசியத்தினை நேசித்து இருக்கின்றனர் என்ற விடயம் தெளிவாக வெளிப்படும். 

 கடந்த காலத்தில் தமிழ் மக்களின் முக்கிய பேச்சாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழ் மக்கள் மீது வெளியீட்ட கருத்துக்கள் தேசியத்திற்கு ஏதிராக அமைந்து. வடமாகாண மக்களும் அதனை உணர்ந்து தமிழ் தேசியத்தினை வெற்றி பெறச்செய்யவேண்டும். சிவஞானம் சிறிதரனே தமிழ் தேசியத்தினை பாதுகாக்காக பொருத்தமான தலைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்த நாட்டுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் அவர்கள் செல்லும் போது அவருக்கு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து ஏதிராக கோசங்கள் எழுப்பபட்டன.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் அது தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சுமந்திரன் தமிழரசு கட்சியின் தலைவரானால் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு - முன்னாள் எம்.பி யோகேஸ்வரன்.samugammedia தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான  சட்டத்தரணி எம். எ .சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் தமிழ்தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்த நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு தேசியத்தினை நேசித்து இருக்கின்றனர் என்ற விடயம் தெளிவாக வெளிப்படும்.  கடந்த காலத்தில் தமிழ் மக்களின் முக்கிய பேச்சாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழ் மக்கள் மீது வெளியீட்ட கருத்துக்கள் தேசியத்திற்கு ஏதிராக அமைந்து. வடமாகாண மக்களும் அதனை உணர்ந்து தமிழ் தேசியத்தினை வெற்றி பெறச்செய்யவேண்டும். சிவஞானம் சிறிதரனே தமிழ் தேசியத்தினை பாதுகாக்காக பொருத்தமான தலைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்த நாட்டுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் அவர்கள் செல்லும் போது அவருக்கு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து ஏதிராக கோசங்கள் எழுப்பபட்டன.எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் அது தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement