• Feb 04 2025

சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் தமிழ் மக்கள் - வவுனியா முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசிய கொடிகள்

Chithra / Feb 4th 2025, 11:57 am
image


வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன 

சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உட்பட வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளமையுடன்,

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் தமிழ் மக்கள் - வவுனியா முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசிய கொடிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உட்பட வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளமையுடன்,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement