• Nov 07 2024

கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை கட்டாயம் பாரத் அருள்சாமிக்கு வழங்க வேண்டும்- இராஜரட்னம் வேண்டுகோள்..!

Sharmi / Nov 6th 2024, 3:01 pm
image

Advertisement

மலையகத்தின் மூத்த அரசியல்வாதியும், கண்டி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். இராஜரட்னம், தனது பேராதரவை ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமிக்கு வழங்கியுள்ளார்.

புசல்லாவை பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று, தமது ஆதரவை அவர் பாரத் அருள்சாமிக்கு வெளிப்படுத்தினார்.

ஆளுமைமிக்க இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை இம்முறை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் எனவும், கண்டி மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க பாரத் அருள்சாமியே சிறந்த தேர்வு எனவும் எஸ். இராஜரட்னம் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல்களின்போது நான் ஏனைய வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை, எனினும், கடந்த காலங்களில் இவர் ஆற்றியுள்ள சேவைகள் மற்றும் சிறந்த அரசியல் தலைமைத்தவ பண்பு உள்ளிட்ட விடயங்களைக்கருதியே ஆதரவை வழங்கும் தீர்மானத்தை எடுத்தேன்.

எனவே, கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை கட்டாயம் பாரத் அருள்சாமிக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் இராஜரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை கட்டாயம் பாரத் அருள்சாமிக்கு வழங்க வேண்டும்- இராஜரட்னம் வேண்டுகோள். மலையகத்தின் மூத்த அரசியல்வாதியும், கண்டி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். இராஜரட்னம், தனது பேராதரவை ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமிக்கு வழங்கியுள்ளார்.புசல்லாவை பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று, தமது ஆதரவை அவர் பாரத் அருள்சாமிக்கு வெளிப்படுத்தினார்.ஆளுமைமிக்க இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை இம்முறை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் எனவும், கண்டி மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க பாரத் அருள்சாமியே சிறந்த தேர்வு எனவும் எஸ். இராஜரட்னம் தெரிவித்தார்.பொதுத்தேர்தல்களின்போது நான் ஏனைய வேட்பாளர்களை ஆதரிப்பதில்லை, எனினும், கடந்த காலங்களில் இவர் ஆற்றியுள்ள சேவைகள் மற்றும் சிறந்த அரசியல் தலைமைத்தவ பண்பு உள்ளிட்ட விடயங்களைக்கருதியே ஆதரவை வழங்கும் தீர்மானத்தை எடுத்தேன்.எனவே, கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை கட்டாயம் பாரத் அருள்சாமிக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் இராஜரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement