• Nov 24 2024

வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - அதிகரிக்கும் நோய் அபாயம்

Chithra / Nov 6th 2024, 3:07 pm
image

 

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். 

தற்போது நாடு முழுவதிலும் உள்ள 8 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தற்போது நாடளாவிய ரீதியில் 42,730 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோய் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது. 

அதற்கமைய, குறித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - அதிகரிக்கும் நோய் அபாயம்  வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதிலும் உள்ள 8 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது நாடளாவிய ரீதியில் 42,730 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோய் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது. அதற்கமைய, குறித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement