• Nov 26 2024

மஹிந்தவை நிராகரித்த தமிழ் மக்கள்..! பிள்ளையாயே காரணம்! எதிர்க்கட்சி பரபரப்புத் தகவல்

Chithra / Jun 24th 2024, 10:03 am
image

 

ரணில் விக்கிமசிங்க, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் பலமற்றவர் எனவும், சஜித் பிரேமதாஸாவின் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிமசிங்க தேர்தலில் போட்டியிடுவராக இருந்தால் எமது கட்சி மேலும் வலுப்பெறும்.

ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் பலமற்றவர். 

அவரை போன்ற ஒருவர் வேட்டபாளராக முன்னிலையாவாராக இருந்தால், அவருடன் இருப்பவர்களும் எம்முடன் வந்து இணைந்துகொள்வார்கள்.

ஆகவே சஜித் பிரேமதாசவின் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது.

சஜித் பிரேமதாஜவைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது கடளின் ஆசீர்வாதமாகும்.

அத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடும் தேர்தலை நோக்கியதொன்றாகும்.

பிள்ளையான் போன்ற தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தமையினாலேயே, வடக்கு – கிழக்கு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்தார்கள்.

அத்தோடு ரணில் விக்கிமசிக்கவுக்கு வடக்கு – கிழக்கில் ஆதரவு கிடைத்தமைக்கான காரணமும், பிள்ளையான் போன்றவர்களை அவர் இணைத்துக்கொள்ளாததால் தான். என அவர்  தெரிவித்தார்.

மஹிந்தவை நிராகரித்த தமிழ் மக்கள். பிள்ளையாயே காரணம் எதிர்க்கட்சி பரபரப்புத் தகவல்  ரணில் விக்கிமசிங்க, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் பலமற்றவர் எனவும், சஜித் பிரேமதாஸாவின் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ரணில் விக்கிமசிங்க தேர்தலில் போட்டியிடுவராக இருந்தால் எமது கட்சி மேலும் வலுப்பெறும்.ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் பலமற்றவர். அவரை போன்ற ஒருவர் வேட்டபாளராக முன்னிலையாவாராக இருந்தால், அவருடன் இருப்பவர்களும் எம்முடன் வந்து இணைந்துகொள்வார்கள்.ஆகவே சஜித் பிரேமதாசவின் வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது.சஜித் பிரேமதாஜவைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது கடளின் ஆசீர்வாதமாகும்.அத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடும் தேர்தலை நோக்கியதொன்றாகும்.பிள்ளையான் போன்ற தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தமையினாலேயே, வடக்கு – கிழக்கு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்தார்கள்.அத்தோடு ரணில் விக்கிமசிக்கவுக்கு வடக்கு – கிழக்கில் ஆதரவு கிடைத்தமைக்கான காரணமும், பிள்ளையான் போன்றவர்களை அவர் இணைத்துக்கொள்ளாததால் தான். என அவர்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement