• Nov 26 2024

தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி..!!

Tamil nila / May 2nd 2024, 8:04 pm
image

தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும்  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்  தெரிவித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் க.குகன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஶ்ரீ பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தனர்.

பொது வேட்பாளர் என்பது ரணில் அவர்களுக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சியாகும் அதற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் அடி பணியக்கூடாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகள் தொடர்பில் இன்று தமிழ் மக்கள் ஒரு நல்லபிப்பிராயத்தினை கொண்டுள்ளனர், இந் நிலையில் பொது வேட்பாளரையும் புறக்கணித்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலினையும் புறக்கணிப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தெற்கில் இருக்கும் எந்தவொரு தலைவரையும் நம்மதயாராக இல்லை எனும் செய்தியை வழங்கமுடியும் என இதன்போது தெரிவித்தனர்.


தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும்  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்  தெரிவித்தனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் க.குகன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஶ்ரீ பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.தொடர்ந்தும் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தனர்.பொது வேட்பாளர் என்பது ரணில் அவர்களுக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சியாகும் அதற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் அடி பணியக்கூடாது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகள் தொடர்பில் இன்று தமிழ் மக்கள் ஒரு நல்லபிப்பிராயத்தினை கொண்டுள்ளனர், இந் நிலையில் பொது வேட்பாளரையும் புறக்கணித்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலினையும் புறக்கணிப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தெற்கில் இருக்கும் எந்தவொரு தலைவரையும் நம்மதயாராக இல்லை எனும் செய்தியை வழங்கமுடியும் என இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement