• Jan 26 2025

வடக்கு, கிழக்கு மக்களுடைய எதிர்காலம் குறித்து பொறுப்பு தமிழரசு கட்சிக்கு இருக்கின்றது - சாணக்கியன்

Tharmini / Jan 15th 2025, 9:51 am
image

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கில் மக்கள் மத்தியில் சில அதிர்ப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கள்வர்களையும் கொலைகாரர்களையும்,ஊழல்வாதிகளையும் பிடித்து நாட்டினை தூய்மைப்படுத்தவேண்டியவர்கள் பஸ்களில் தோரணங்களை களட்டி தூய்மைப்படுத்தமுனைவதாகவும் அவர் தெரிவித்தார்.

தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு விசேட தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு செட்டிபாளயம் வீரம்மா காளி அம்மன் ஆலயத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதன்போது மூன்று பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டு படைக்கப்பட்ட அம்பாளுக்கும் சூரிய பகவானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்தார். இதனை தொடர்ந்து செட்டிபாளயம் பகுதியில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்து தைத்திருநாள் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். செட்டிபாளையம் சிவன் , முருகன் , பைரவர் ஆலயம் என்பவனற்றில் சிறப்பு தைத்திருநாள் வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், நேற்று (14) மட்டக்களப்பு செட்டிபாளையம் வீரம்மாகாளியம்மன் ஆலயத்திலே செட்டிபாளையத்தை சேர்ந்த அனைத்து ஆலயங்களோடு நிர்வாகிகளும் இணைந்து ஒரு விசேட பொங்கல் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்து அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் என்னை அழைத்திருந்தார்கள் அந்த வகையிலே இந்த வருடம் அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த ஒரு வருடமாக அமைய வேண்டும் என்று நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்களுடைய எதிர்காலத்தை குறித்து பாரிய பொறுப்பு எனக்கும் எனது கட்சி இலங்கை தமிழரசு கட்சிக்கும் இருக்கின்றது அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள் கடந்த காலங்களிலும் கூட தை பிறந்தால் எமது தமிழ் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்கின்றதன் அடிப்படையில் நாங்கள் அரசியலில் ஈடுபட்டு எங்களுடைய அரசியல் தீர்வு விடயம் மற்றும் எமது மக்களின் அடிப்படை போன்ற விடயங்களில் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.

சில விடயங்களை நாங்கள் கடந்த காலத்தில் அடையக் கூடியதாக இருந்தது சில விடயங்களை முழுமையாக திருப்தி அடையக்கூடிய நிலையில் காணப்படவில்லை சில விடயங்களில் சில முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுத்திருந்தோம் சில விடயங்கள் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்ற விடயங்களும் இருக்கின்றது.

புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றது புதிய அரசாங்கத்தில் நாட்டின் வரலாற்றிலே முதலாவது முறையாக ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை 159 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் பலமான பெரும்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பகுதி இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களது அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தில் நாங்கள் சிறப்பாக முறையில் முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே நிரந்தரமான ஒரு கௌரவமான தீர்வு ஒன்று சமாதானத்துடன் வாழக்கூடிய அதாவது அனைத்து உரிமைகளுடன் சம உரிமையுடன் இந்த நாட்டிலே தமிழ் மக்களும் ஒரு மக்களாக அங்கீகாரத்துடன் எங்களுடைய சகல அதிகாரங்களுடன் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் தீர்வு ஒன்றை அந்த விடயத்தினை ஆரம்பித்து இல்லை என்றால் உருவாக்குகின்ற அந்த பணியில் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு அர்த்தங்களை கொடுக்கும் வகையாக இந்த வருடத்திலேயே எமது செயற்பாடுகள் கட்சி சார்பாக அமைய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் இன்றைய இந்த நன்னாளில் ஒவ்வொரு பிரச்சினைகளையும் நான் கூற விரும்பவில்லை உதாரணமாக நமது மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் கால்நடை மற்றும் மீன்பிடி இந்த மூன்று துறைகளையும் நம்பித்தான் கூடுதலான நமது மக்கள் வாழ்வாதாரம் காணப்படுகின்றது அந்த வகையில் இந்த மூன்று துறையில் இருக்கின்ற பல சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் அதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

அதேபோன்று இந்த வருடத்தில் தேர்தல்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அதே போன்று மாகாண சபை தேர்தல் நடைபெற இருக்கின்றது கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது மக்கள் முடிவெடுத்தது போல வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தை இந்த தேர்தல்களில் ஆதரிப்பதன் ஊடாக பாரிய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பிரதான அரசியல் கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடியது எந்த அளவிற்கு அவகாசம் இருக்கின்றது என்பது பற்றி சந்தேக மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது அந்த வகையில் அவர்களை குறைத்து மதிப்பீடு செய்யவில்லை ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை என்பது எமது மக்களது நேரடி தொடர்பாடல் உள்ள இரண்டு திணைக்களங்கள் இல்லாவிட்டால் இரண்டு அமைப்புகள் அந்த வகையில் அதனுடைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் அத்தோடு அனைத்து மாகாண சபைகளிலும் வடக்கு கிழக்கில் இருக்கும் எங்களது அதிகாரத்தை இந்த வருடத்தில் தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சியிலே கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒப்படைத்தது போல இந்த தேர்தல்களிலும் ஒப்படைக்க வேண்டும்.

அதற்காக மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் எங்களது செயற்பாடுகளை இந்த வருடத்தில் நடைபெறும் என்பதனை சொல்லி மீண்டும் நமது மக்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு பாராளுமன்றத்திலே பாராளுமன்ற விவகாரங்களில் குழுவிலே இருக்கின்ற ஒரு குழு உறுப்பினராக அதாவது இந்த பிசினஸ் கமிட்டியிலே அதாவது பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற விவகாரங்கள் அனைத்தும் பற்றி பேசப்படுகிறது அதில் தமிழ் தரப்பு சார்பாக இருக்கும் ஒரே ஒரு பிரதிநிதி நான் மாத்திரம் தான் அந்த வகையில் அதில் நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் பார்த்தால் அந்த மூன்று வருடத்திற்குள் தாங்கள் அதனை பூர்த்தி செய்வோம் என கூறி இருக்கின்றார்கள் என்று தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

மூன்று வருடத்திற்கு பின்னர் தான் ஆரம்பிக்கப்படும் என்று அல்ல மூன்று வருடத்திற்கு உள்ளே அது பூர்த்தியாகும் என்று ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியுடன் அந்த கேள்வியுடன் நானும் உள் அடங்குகின்றேன் மூன்று வருடங்கள் எடுத்தால் அடுத்த தேர்தல் வந்துவிடும் அரசாங்கம் தற்போது நான் நினைக்கின்றேன் பாரிய நெருக்கடிகள் ஆரம்பித்திருக்கின்றது.

இன்று நீங்கள் இந்த கேள்வியை கேட்காமல் விட்டிருந்தால் இந்த கருத்துக்களை சொல்லாமல் விட்டிருப்பேன் ஆனால் இன்று எத்தனையோ மக்கள் பொங்கல் கூட பொங்குவதற்கு இன்று அரிசி தட்டுப்பாட்டின் காரணமாக சில சிக்கல்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றார்கள். அதேபோன்று தேங்காயிலிருந்து பல விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது இவ்வாறான பிரச்சினைகள் இன்னமும் அதிகரிக்குமே தவிர இந்த அரசாங்கத்தினுடைய காலப்பகுதிக்குள் குறையப்போவதாக தெரியவில்லை.

வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதிகள் வழங்கினால் உடனடியாக அமெரிக்க டாலருக்கு இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்து அமெரிக்க டாலருக்கான பெறுமதி அதிகரிக்கும் விலைவாசிகள் அதிகரிக்கும். இவ்வாறான பிரச்சினைகள் வருகின்ற போது புதிய அரசியல் அமைப்பு ஒன்று இதன் ஊடாக உருவாக்கக்கூடிய வகையாக மக்களுடைய ஆதரவு அரசுக்கு இருக்குமா என்ற சந்தேகம் இருக்கின்றது ஏனென்றால் கிளீன் ஸ்ரீலங்கா என்று திட்டத்தின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த சில திட்டங்களை பற்றி தெற்கிலே மக்களுக்கு பாரிய அதிருப்தி இருக்கின்றது.

ஏனென்றால் கிளீன் ஸ்ரீலங்கா என்று வாகனங்களில் இருக்கின்ற பேருந்தில் கண் தெரியாத அளவிற்கு வைத்திருந்த விடயங்களை அகற்றுவது நல்ல விடயங்கள் தான் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது ஆனால் மக்கள் எதிர்பார்த்த கிளீன் ஸ்ரீலங்கா எவ்வாறு என்றால் ஊழல்வாதிகளை கிளீன் பண்ணுவார்கள் கொலை செய்தவர்களை கிளீன் பண்ணுவார்கள் களவு செய்தவர்களை கிளீன் பண்ணுவார்கள் ஆனால் அதை விட்டுவிட்டு வாகனங்களில் தொங்கி இருக்கும் சிலைகளையும் வாகனத்தை அழகு படுத்துவதற்காக வைத்திருந்த பொம்மைகளையும் அகற்றுவது இல்லை.

அதாவது கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் கப்பம் வாங்கியவனையும் பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டவனையும் சீனி மோசடி என்னை மோசடி எத்தனையோ மோசடிகள் இவ்வாறு காணப்படுகின்றது அவர்களே அந்த பட்டியலை விட்டு விட்டு அவர்களே கிளீன் பண்ணுவார்கள் என்று பார்த்தால் முச்சக்கர வண்டிகளில் அடித்து இருக்கின்ற ஸ்டிக்கர்களையும் அழகு படுத்துகின்ற விடயங்களை கிளீன் பண்ணுவதை எல்லாம் பார்த்து மக்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் ஒரு புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்குகின்ற நேரம் மூன்று வருடத்தில் தான் அரசியலமைப்பின் வேலைகள் பூர்த்தியாகும் என்றால் அந்த நேரத்தில் அதை செய்யும் அளவிற்கு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்குமா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பூரணமான அழுத்தங்களை இதற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் வழங்குவோம்.




வடக்கு, கிழக்கு மக்களுடைய எதிர்காலம் குறித்து பொறுப்பு தமிழரசு கட்சிக்கு இருக்கின்றது - சாணக்கியன் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கில் மக்கள் மத்தியில் சில அதிர்ப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.கள்வர்களையும் கொலைகாரர்களையும்,ஊழல்வாதிகளையும் பிடித்து நாட்டினை தூய்மைப்படுத்தவேண்டியவர்கள் பஸ்களில் தோரணங்களை களட்டி தூய்மைப்படுத்தமுனைவதாகவும் அவர் தெரிவித்தார்.தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு விசேட தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு செட்டிபாளயம் வீரம்மா காளி அம்மன் ஆலயத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதன்போது மூன்று பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டு படைக்கப்பட்ட அம்பாளுக்கும் சூரிய பகவானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்தார். இதனை தொடர்ந்து செட்டிபாளயம் பகுதியில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்து தைத்திருநாள் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். செட்டிபாளையம் சிவன் , முருகன் , பைரவர் ஆலயம் என்பவனற்றில் சிறப்பு தைத்திருநாள் வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், நேற்று (14) மட்டக்களப்பு செட்டிபாளையம் வீரம்மாகாளியம்மன் ஆலயத்திலே செட்டிபாளையத்தை சேர்ந்த அனைத்து ஆலயங்களோடு நிர்வாகிகளும் இணைந்து ஒரு விசேட பொங்கல் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்து அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் என்னை அழைத்திருந்தார்கள் அந்த வகையிலே இந்த வருடம் அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த ஒரு வருடமாக அமைய வேண்டும் என்று நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்களுடைய எதிர்காலத்தை குறித்து பாரிய பொறுப்பு எனக்கும் எனது கட்சி இலங்கை தமிழரசு கட்சிக்கும் இருக்கின்றது அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள் கடந்த காலங்களிலும் கூட தை பிறந்தால் எமது தமிழ் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்கின்றதன் அடிப்படையில் நாங்கள் அரசியலில் ஈடுபட்டு எங்களுடைய அரசியல் தீர்வு விடயம் மற்றும் எமது மக்களின் அடிப்படை போன்ற விடயங்களில் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.சில விடயங்களை நாங்கள் கடந்த காலத்தில் அடையக் கூடியதாக இருந்தது சில விடயங்களை முழுமையாக திருப்தி அடையக்கூடிய நிலையில் காணப்படவில்லை சில விடயங்களில் சில முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுத்திருந்தோம் சில விடயங்கள் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்ற விடயங்களும் இருக்கின்றது.புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றது புதிய அரசாங்கத்தில் நாட்டின் வரலாற்றிலே முதலாவது முறையாக ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை 159 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் பலமான பெரும்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பகுதி இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களது அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தில் நாங்கள் சிறப்பாக முறையில் முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே நிரந்தரமான ஒரு கௌரவமான தீர்வு ஒன்று சமாதானத்துடன் வாழக்கூடிய அதாவது அனைத்து உரிமைகளுடன் சம உரிமையுடன் இந்த நாட்டிலே தமிழ் மக்களும் ஒரு மக்களாக அங்கீகாரத்துடன் எங்களுடைய சகல அதிகாரங்களுடன் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் தீர்வு ஒன்றை அந்த விடயத்தினை ஆரம்பித்து இல்லை என்றால் உருவாக்குகின்ற அந்த பணியில் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு அர்த்தங்களை கொடுக்கும் வகையாக இந்த வருடத்திலேயே எமது செயற்பாடுகள் கட்சி சார்பாக அமைய வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் நமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் இன்றைய இந்த நன்னாளில் ஒவ்வொரு பிரச்சினைகளையும் நான் கூற விரும்பவில்லை உதாரணமாக நமது மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் கால்நடை மற்றும் மீன்பிடி இந்த மூன்று துறைகளையும் நம்பித்தான் கூடுதலான நமது மக்கள் வாழ்வாதாரம் காணப்படுகின்றது அந்த வகையில் இந்த மூன்று துறையில் இருக்கின்ற பல சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் அதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.அதேபோன்று இந்த வருடத்தில் தேர்தல்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அதே போன்று மாகாண சபை தேர்தல் நடைபெற இருக்கின்றது கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது மக்கள் முடிவெடுத்தது போல வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தை இந்த தேர்தல்களில் ஆதரிப்பதன் ஊடாக பாரிய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பிரதான அரசியல் கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடியது எந்த அளவிற்கு அவகாசம் இருக்கின்றது என்பது பற்றி சந்தேக மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது அந்த வகையில் அவர்களை குறைத்து மதிப்பீடு செய்யவில்லை ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை என்பது எமது மக்களது நேரடி தொடர்பாடல் உள்ள இரண்டு திணைக்களங்கள் இல்லாவிட்டால் இரண்டு அமைப்புகள் அந்த வகையில் அதனுடைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் அத்தோடு அனைத்து மாகாண சபைகளிலும் வடக்கு கிழக்கில் இருக்கும் எங்களது அதிகாரத்தை இந்த வருடத்தில் தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சியிலே கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒப்படைத்தது போல இந்த தேர்தல்களிலும் ஒப்படைக்க வேண்டும்.அதற்காக மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் எங்களது செயற்பாடுகளை இந்த வருடத்தில் நடைபெறும் என்பதனை சொல்லி மீண்டும் நமது மக்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஒரு பாராளுமன்றத்திலே பாராளுமன்ற விவகாரங்களில் குழுவிலே இருக்கின்ற ஒரு குழு உறுப்பினராக அதாவது இந்த பிசினஸ் கமிட்டியிலே அதாவது பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற விவகாரங்கள் அனைத்தும் பற்றி பேசப்படுகிறது அதில் தமிழ் தரப்பு சார்பாக இருக்கும் ஒரே ஒரு பிரதிநிதி நான் மாத்திரம் தான் அந்த வகையில் அதில் நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் பார்த்தால் அந்த மூன்று வருடத்திற்குள் தாங்கள் அதனை பூர்த்தி செய்வோம் என கூறி இருக்கின்றார்கள் என்று தான் சொல்லப்பட்டிருக்கின்றது.மூன்று வருடத்திற்கு பின்னர் தான் ஆரம்பிக்கப்படும் என்று அல்ல மூன்று வருடத்திற்கு உள்ளே அது பூர்த்தியாகும் என்று ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியுடன் அந்த கேள்வியுடன் நானும் உள் அடங்குகின்றேன் மூன்று வருடங்கள் எடுத்தால் அடுத்த தேர்தல் வந்துவிடும் அரசாங்கம் தற்போது நான் நினைக்கின்றேன் பாரிய நெருக்கடிகள் ஆரம்பித்திருக்கின்றது. இன்று நீங்கள் இந்த கேள்வியை கேட்காமல் விட்டிருந்தால் இந்த கருத்துக்களை சொல்லாமல் விட்டிருப்பேன் ஆனால் இன்று எத்தனையோ மக்கள் பொங்கல் கூட பொங்குவதற்கு இன்று அரிசி தட்டுப்பாட்டின் காரணமாக சில சிக்கல்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றார்கள். அதேபோன்று தேங்காயிலிருந்து பல விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது இவ்வாறான பிரச்சினைகள் இன்னமும் அதிகரிக்குமே தவிர இந்த அரசாங்கத்தினுடைய காலப்பகுதிக்குள் குறையப்போவதாக தெரியவில்லை.வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதிகள் வழங்கினால் உடனடியாக அமெரிக்க டாலருக்கு இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்து அமெரிக்க டாலருக்கான பெறுமதி அதிகரிக்கும் விலைவாசிகள் அதிகரிக்கும். இவ்வாறான பிரச்சினைகள் வருகின்ற போது புதிய அரசியல் அமைப்பு ஒன்று இதன் ஊடாக உருவாக்கக்கூடிய வகையாக மக்களுடைய ஆதரவு அரசுக்கு இருக்குமா என்ற சந்தேகம் இருக்கின்றது ஏனென்றால் கிளீன் ஸ்ரீலங்கா என்று திட்டத்தின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த சில திட்டங்களை பற்றி தெற்கிலே மக்களுக்கு பாரிய அதிருப்தி இருக்கின்றது.ஏனென்றால் கிளீன் ஸ்ரீலங்கா என்று வாகனங்களில் இருக்கின்ற பேருந்தில் கண் தெரியாத அளவிற்கு வைத்திருந்த விடயங்களை அகற்றுவது நல்ல விடயங்கள் தான் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது ஆனால் மக்கள் எதிர்பார்த்த கிளீன் ஸ்ரீலங்கா எவ்வாறு என்றால் ஊழல்வாதிகளை கிளீன் பண்ணுவார்கள் கொலை செய்தவர்களை கிளீன் பண்ணுவார்கள் களவு செய்தவர்களை கிளீன் பண்ணுவார்கள் ஆனால் அதை விட்டுவிட்டு வாகனங்களில் தொங்கி இருக்கும் சிலைகளையும் வாகனத்தை அழகு படுத்துவதற்காக வைத்திருந்த பொம்மைகளையும் அகற்றுவது இல்லை.அதாவது கொலைகாரனையும் கொள்ளைக்காரனையும் கப்பம் வாங்கியவனையும் பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டவனையும் சீனி மோசடி என்னை மோசடி எத்தனையோ மோசடிகள் இவ்வாறு காணப்படுகின்றது அவர்களே அந்த பட்டியலை விட்டு விட்டு அவர்களே கிளீன் பண்ணுவார்கள் என்று பார்த்தால் முச்சக்கர வண்டிகளில் அடித்து இருக்கின்ற ஸ்டிக்கர்களையும் அழகு படுத்துகின்ற விடயங்களை கிளீன் பண்ணுவதை எல்லாம் பார்த்து மக்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள்.அந்த வகையில் ஒரு புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்குகின்ற நேரம் மூன்று வருடத்தில் தான் அரசியலமைப்பின் வேலைகள் பூர்த்தியாகும் என்றால் அந்த நேரத்தில் அதை செய்யும் அளவிற்கு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்குமா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பூரணமான அழுத்தங்களை இதற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் வழங்குவோம்.

Advertisement

Advertisement

Advertisement