• Nov 22 2024

இங்கிலாந்து தப்பிச் செல்ல முயன்ற இளம் தமிழ் பெண் - கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது!

Chithra / Jun 17th 2024, 7:45 am
image

 

இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு  08.25 மணியளவில் தோஹா நோக்கிச் செல்வதற்காக கட்டார் எயார்வேஸ் விமானமான முசு-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை மையத்தில் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை குறித்த இளம் பெண் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்தில் வித்தியாசம் காணப்பட்டமையினால் தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி அனைத்து ஆவணங்களும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது இங்கிலாந்து கடவுச்சீட்டு வைத்திருக்கும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரும் பெண்ணுடன் விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்த நிலையில், 

அவர் குறித்த பெண்ணை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கு தரகராகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இருவரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக  கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தப்பிச் செல்ல முயன்ற இளம் தமிழ் பெண் - கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது  இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றுமுன்தினம் இரவு  08.25 மணியளவில் தோஹா நோக்கிச் செல்வதற்காக கட்டார் எயார்வேஸ் விமானமான முசு-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இதன்போது அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை மையத்தில் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை குறித்த இளம் பெண் சமர்ப்பித்துள்ளார்.இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்தில் வித்தியாசம் காணப்பட்டமையினால் தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி அனைத்து ஆவணங்களும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது இங்கிலாந்து கடவுச்சீட்டு வைத்திருக்கும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரும் பெண்ணுடன் விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்த நிலையில், அவர் குறித்த பெண்ணை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கு தரகராகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக  கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement