• Sep 20 2024

ஒன்டாரியோ மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்! samugammedia

Chithra / Jul 2nd 2023, 9:55 am
image

Advertisement

Scarborough - Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள ஒன்டாரியோ (Ontario) மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதிக்கான இடைதேர்தல் இந்த மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார்.

Scarborough – Guildwood தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என Ontario NDP தலைவர் Marit Stiles தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (30) காலை இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை (01) நடைபெறும் வேட்பு மனு கூட்டத்தில் Scarborough - Guildwood தொகுதி கட்சி உறுப்பினர்களால் இந்த நியமனம் உறுதி செய்யப்படும் என NDP கட்சி தெரிவித்தது.


ஒன்டாரியோ மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண் samugammedia Scarborough - Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள ஒன்டாரியோ (Ontario) மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.இந்த தொகுதிக்கான இடைதேர்தல் இந்த மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.இந்த இடைத்தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார்.Scarborough – Guildwood தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என Ontario NDP தலைவர் Marit Stiles தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை (30) காலை இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.சனிக்கிழமை (01) நடைபெறும் வேட்பு மனு கூட்டத்தில் Scarborough - Guildwood தொகுதி கட்சி உறுப்பினர்களால் இந்த நியமனம் உறுதி செய்யப்படும் என NDP கட்சி தெரிவித்தது.

Advertisement

Advertisement

Advertisement