• Nov 17 2024

தமிழர்களிடம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பு எதுவம் இல்லை - புஸ்பராசா

Tharmini / Nov 11th 2024, 3:47 pm
image

தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை. கல்வியும் இல்லை.பொருளாதாரம் இல்லை. சமூக கட்டமைப்பும் இல்லை. 

இவ்வாறு ஒன்றும் இல்லாமல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்து சேறு பூசுவதற்காக தான் எல்லோரும் வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கி.லிங்கேஸ்வரனின் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை. கல்வியும் இல்லை.பொருளாதாரம் இல்லை. சமூக கட்டமைப்பும் இல்லை. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்து சேறு பூசுவதற்காக தான் எல்லோரும் வருகிறார்கள்.

ஒருவர்  சட்ட முதுமாணி  சட்டத்தரணி என்று வருகின்றார். அடுத்தவர்  தொழிலதிபர்  என்று  சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர் கோடிக்கணக்கான பணத்தினை செலவு செய்கின்றார்.

இதற்கு முன்னர் இருந்த காலத்தில் ஏன் அவரால்  ஒரு வீட்டு திட்டத்தை   கட்டிக் கொடுத்திருக்க முடியாது. 

அடிப்படை வசதி கூட இல்லாத பிரதேசங்கள் இருக்கின்றன.ஏன் அவற்றை அபிவிருத்தி செய்யவில்லை. தேர்தல் காலத்தில் தேர்தல் கட்டளை சட்டத்தை மீறி அவர்  ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அவரது நடவடிக்கைகள் ஆழமாக ஊடுருவிக் கொண்டு வருகின்றது.

ஒரு தேர்தல் காலகட்டத்தில் தேர்தல் கட்டளை சட்டத்தை மீறி வீதிகளை நிர்மாணிக்கின்றார் என்று கூட  எனது காரியாலத் திறப்பு விழாவில் பகிரங்கமாக கூறியிருந்தேன்.

பின்னர்  ஊடகத்தில் பெயரும் சொல்லி இடமும் சொல்லி பகிரங்கமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது .அதை  தாண்டி அவர் இன்று  ஐந்து கிலோ அரிசி  சீனி உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வாக்கினை கேட்கின்றார்.

கிரசர் தூளையும் சாராயத்தையும் தொடர்ச்சியாக வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்.

இன்றோடு அதனை அவர் கைவிட வேண்டும் . இன்றேல் இவர் தமிழினத் துரோகியாக கணிக்கப்படுவார்.

அம்பாறையில் இந்த நிமிஷம் வரைக்கும் தமிழர் ஒருவர் எம். பியாகும் வாய்ப்பு இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன் . எனவே இருக்கின்ற இரண்டு நாட்களை உச்சளவு பயன்படுத்துங்கள்.

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுமா ? என்பதை இந்த தேர்தல் தான் சொல்ல வேண்டும்.

கடந்த வருடம் தமிழரசுக் கட்சியும் அம்மானும் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள் .

இம்முறை தமிழரசுக் கட்சி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி தனியாக போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழக்க போகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் கலையரசன் ஆகியோர் இருந்து என்ன செய்தார்கள்?





தமிழர்களிடம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பு எதுவம் இல்லை - புஸ்பராசா தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை. கல்வியும் இல்லை.பொருளாதாரம் இல்லை. சமூக கட்டமைப்பும் இல்லை. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்து சேறு பூசுவதற்காக தான் எல்லோரும் வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கி.லிங்கேஸ்வரனின் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, தமிழர்களிடம் இனப்பெருக்கம் இல்லை. கல்வியும் இல்லை.பொருளாதாரம் இல்லை. சமூக கட்டமைப்பும் இல்லை. இவ்வாறு ஒன்றும் இல்லாமல் இந்த அரசியல் சாக்கடைக்குள் விழுந்து சேறு பூசுவதற்காக தான் எல்லோரும் வருகிறார்கள்.ஒருவர்  சட்ட முதுமாணி  சட்டத்தரணி என்று வருகின்றார். அடுத்தவர்  தொழிலதிபர்  என்று  சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர் கோடிக்கணக்கான பணத்தினை செலவு செய்கின்றார். இதற்கு முன்னர் இருந்த காலத்தில் ஏன் அவரால்  ஒரு வீட்டு திட்டத்தை   கட்டிக் கொடுத்திருக்க முடியாது. அடிப்படை வசதி கூட இல்லாத பிரதேசங்கள் இருக்கின்றன.ஏன் அவற்றை அபிவிருத்தி செய்யவில்லை. தேர்தல் காலத்தில் தேர்தல் கட்டளை சட்டத்தை மீறி அவர்  ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அவரது நடவடிக்கைகள் ஆழமாக ஊடுருவிக் கொண்டு வருகின்றது. ஒரு தேர்தல் காலகட்டத்தில் தேர்தல் கட்டளை சட்டத்தை மீறி வீதிகளை நிர்மாணிக்கின்றார் என்று கூட  எனது காரியாலத் திறப்பு விழாவில் பகிரங்கமாக கூறியிருந்தேன்.பின்னர்  ஊடகத்தில் பெயரும் சொல்லி இடமும் சொல்லி பகிரங்கமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது .அதை  தாண்டி அவர் இன்று  ஐந்து கிலோ அரிசி  சீனி உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வாக்கினை கேட்கின்றார்.கிரசர் தூளையும் சாராயத்தையும் தொடர்ச்சியாக வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார். இன்றோடு அதனை அவர் கைவிட வேண்டும் . இன்றேல் இவர் தமிழினத் துரோகியாக கணிக்கப்படுவார்.அம்பாறையில் இந்த நிமிஷம் வரைக்கும் தமிழர் ஒருவர் எம். பியாகும் வாய்ப்பு இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன் . எனவே இருக்கின்ற இரண்டு நாட்களை உச்சளவு பயன்படுத்துங்கள்.ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுமா என்பதை இந்த தேர்தல் தான் சொல்ல வேண்டும்.கடந்த வருடம் தமிழரசுக் கட்சியும் அம்மானும் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள் . இம்முறை தமிழரசுக் கட்சி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி தனியாக போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை இழக்க போகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் கலையரசன் ஆகியோர் இருந்து என்ன செய்தார்கள்

Advertisement

Advertisement

Advertisement