• May 13 2024

தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வு கிடைக்கும்! கஜேந்திரகுமார் samugammedia

Chithra / Jun 8th 2023, 8:30 am
image

Advertisement

தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என்பதை மருதங்ககேணி சம்பவமும் அதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் உணர்த்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு பொலிஸ் என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாரிடம் இருப்பதனால் பொலிஸார் விசாரணைகளை பக்க சார்பாக முன்னெடுத்து தங்கள் மீது ஒரு அடக்குமுறையை பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த சம்பவம் கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.


அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இனவன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்.

ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசாங்கம் முன்வராது.

எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வு கிடைக்கும் கஜேந்திரகுமார் samugammedia தமிழர்களுக்கு சர்வதேசத்தின் தலையீட்டில் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என்பதை மருதங்ககேணி சம்பவமும் அதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் உணர்த்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு பொலிஸ் என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாரிடம் இருப்பதனால் பொலிஸார் விசாரணைகளை பக்க சார்பாக முன்னெடுத்து தங்கள் மீது ஒரு அடக்குமுறையை பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த சம்பவம் கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இனவன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்.ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசாங்கம் முன்வராது.எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement