• Oct 16 2024

வரி மோசடி; அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

Chithra / Oct 16th 2024, 1:31 pm
image

Advertisement

 

தம்மை  பிணையில் விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்துள்ளது. 

3.5 பில்லியன் பெறுமதியான வற் வரியை செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான  ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக்ஸாரூக், நீதிமன்றில் வாதங்களை  முன்வைத்து,  அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், வழக்கு தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க குறித்த இருவரின் பிணை கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார்.

வரி மோசடி; அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்  தம்மை  பிணையில் விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்துள்ளது. 3.5 பில்லியன் பெறுமதியான வற் வரியை செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான  ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக்ஸாரூக், நீதிமன்றில் வாதங்களை  முன்வைத்து,  அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.எனினும், வழக்கு தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க குறித்த இருவரின் பிணை கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement