• Mar 10 2025

ஆசிரியை தாக்கிய ஆசிரியர்! – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சபையில் இன்று கோரிக்கை

Chithra / Mar 8th 2025, 12:42 pm
image

 

எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று பாராளுமன்ற அமர்வில் வைத்து குறிப்பிட்டார்.

குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்

இந்த தாக்குதல் தொடர்பாக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றைய நாளுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்

ஆசிரியை தாக்கிய ஆசிரியர் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சபையில் இன்று கோரிக்கை  எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று பாராளுமன்ற அமர்வில் வைத்து குறிப்பிட்டார்.குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்இந்த தாக்குதல் தொடர்பாக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றைய நாளுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்

Advertisement

Advertisement

Advertisement