• May 20 2024

மட்டு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது சக ஆசிரியர் சரமாரி தாக்குதல்! samugammedia

Tamil nila / May 3rd 2023, 6:46 pm
image

Advertisement

மட்டக்களப்பு நகரிலுள்ள தேசிய பெண்கள் பாடசாலை ஒன்றில் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்க அனுமதிக்க வேண்டாம் என சக ஆசிரியர்களை கேட்டுக் கொண்ட ஆசிரியர் மீது சக ஆசிரியர் ஒருவர் இன்று புதன்கிழமை தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பாடசாலைக்கு மட்டக்களப்பு ஆசிரியர் சங்க தலைவர் இடமாற்றம் பெற்று நேற்றைய தினம் தனது கடமையை பெறுப்பேற்க வந்துள்ளமையை அறிந்த பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பாடசாலைக்கு சென்று அவர் கடமையேற்க முடியாது அவர் தொடர்பாக கல்வி திணைக்களத்தில் 40 முறைப்பாடுகள் இருப்பதுடன் அதிபர் இல்லாத போது காலையில் சென்று கையொப்பம் இட்டு கடமையை பெறுப் பேற்றுள்ளமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை இங்கு கடமையாற்ற அனுமதிக்மாட்டோம் என தெரிவித்ததையடுத்து அங்கு ஆசிரியர் சங்க தலைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் இடையே பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பாடசாலை பகல் 1.30 மணிக்கு முடிவடைந்த போது ஆசிரியர் சங்க தலைவரை கடமை கையேட்டில் கையொப்பம் இடுவதற்கு அனுமதிக்காததையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை உருவாகிய நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னை பாடசாலை அபிவிருத்திகுழுவைச் சேர்ந்த 10 பேர் கடமையாற்ற அனுமதிக்காது தடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து இன்று காலை 7 மணிக்கு பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் பாடசாலைக்கு முன்னால் ஒன்றிணைந்து கூடிநின்று கடமையேற்கவரும் ஆசிரியர் சங்க தலைவரை பாடசாலைக்குள் அனுமதிக்க விடாது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காத்திருந்தனர்.

இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் சக ஆசிரியர்களிடம் ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்ற விடவேண்டாம் என கோரியதையடுத்து  மற்றுமொரு ஆசிரியர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேவதிக விசாரணை மேற் கொண்டுவருதுடன் கல்வி திணைக்களமும் ஒழுக்ககாற்று விசாரணையை மேற்கொண்டுள்ளது.

மட்டு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது சக ஆசிரியர் சரமாரி தாக்குதல் samugammedia மட்டக்களப்பு நகரிலுள்ள தேசிய பெண்கள் பாடசாலை ஒன்றில் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்க அனுமதிக்க வேண்டாம் என சக ஆசிரியர்களை கேட்டுக் கொண்ட ஆசிரியர் மீது சக ஆசிரியர் ஒருவர் இன்று புதன்கிழமை தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த பாடசாலைக்கு மட்டக்களப்பு ஆசிரியர் சங்க தலைவர் இடமாற்றம் பெற்று நேற்றைய தினம் தனது கடமையை பெறுப்பேற்க வந்துள்ளமையை அறிந்த பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பாடசாலைக்கு சென்று அவர் கடமையேற்க முடியாது அவர் தொடர்பாக கல்வி திணைக்களத்தில் 40 முறைப்பாடுகள் இருப்பதுடன் அதிபர் இல்லாத போது காலையில் சென்று கையொப்பம் இட்டு கடமையை பெறுப் பேற்றுள்ளமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை இங்கு கடமையாற்ற அனுமதிக்மாட்டோம் என தெரிவித்ததையடுத்து அங்கு ஆசிரியர் சங்க தலைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் இடையே பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.இந்த நிலையில் பாடசாலை பகல் 1.30 மணிக்கு முடிவடைந்த போது ஆசிரியர் சங்க தலைவரை கடமை கையேட்டில் கையொப்பம் இடுவதற்கு அனுமதிக்காததையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை உருவாகிய நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னை பாடசாலை அபிவிருத்திகுழுவைச் சேர்ந்த 10 பேர் கடமையாற்ற அனுமதிக்காது தடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சம்பவத்தையடுத்து இன்று காலை 7 மணிக்கு பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் பாடசாலைக்கு முன்னால் ஒன்றிணைந்து கூடிநின்று கடமையேற்கவரும் ஆசிரியர் சங்க தலைவரை பாடசாலைக்குள் அனுமதிக்க விடாது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காத்திருந்தனர்.இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் சக ஆசிரியர்களிடம் ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்ற விடவேண்டாம் என கோரியதையடுத்து  மற்றுமொரு ஆசிரியர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேவதிக விசாரணை மேற் கொண்டுவருதுடன் கல்வி திணைக்களமும் ஒழுக்ககாற்று விசாரணையை மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement