பாடசாலை ஒன்றில் விரிவுரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் பாகிஸ்தான் லாகூர் கிரசண்ட் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். எந்தவொரு சோர்வுமின்றி சுறுப்பாக தெளிவாக விரிவுரையை நிகழ்த்தினார்.
விரிவுரையை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் திடீரென குறித்த ஆசிரியருக்கு சுகயீனம் ஏற்பட கீழே முழந்தாழிட்டு ஒரு கணத்தில் விழுந்துள்ளார்.
திடீரென ஆசிரியர் கீழே விழுந்ததில் அங்கிருந்த சக ஆசிரியரும் மாணவர்களும் ஆசிரியர் அருகே ஓடிச் சென்றனர். எனினும் ஆசிரியர் மூச்சின்றிக் காணப்பட்டார்.
அதன்பின்னர் ஆசிரியர் உயிரிழந்தது தெரியவந்தது. குறித்த ஆசிரியர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அது உறுதியாகவில்லை.
சுறுசுறுப்புடன் தெளிவாக மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்திய ஆசிரியர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கற்பித்துக்கொண்டிருந்த போது பிரிந்த ஆசிரியரின் உயிர் நொடியில் நிகழ்ந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கிய மாணவர்கள் பாடசாலை ஒன்றில் விரிவுரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் பாகிஸ்தான் லாகூர் கிரசண்ட் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். எந்தவொரு சோர்வுமின்றி சுறுப்பாக தெளிவாக விரிவுரையை நிகழ்த்தினார். விரிவுரையை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் திடீரென குறித்த ஆசிரியருக்கு சுகயீனம் ஏற்பட கீழே முழந்தாழிட்டு ஒரு கணத்தில் விழுந்துள்ளார். திடீரென ஆசிரியர் கீழே விழுந்ததில் அங்கிருந்த சக ஆசிரியரும் மாணவர்களும் ஆசிரியர் அருகே ஓடிச் சென்றனர். எனினும் ஆசிரியர் மூச்சின்றிக் காணப்பட்டார். அதன்பின்னர் ஆசிரியர் உயிரிழந்தது தெரியவந்தது. குறித்த ஆசிரியர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அது உறுதியாகவில்லை. சுறுசுறுப்புடன் தெளிவாக மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்திய ஆசிரியர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.