• Jan 13 2025

மூன்று நாட்களுக்குள் தீர்வில்லாவிட்டால் போராட்டம் - ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் எச்சரிக்கை

Chithra / Jan 9th 2025, 8:18 am
image

 

தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. 

பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற கோரிக்கைக்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரியுள்ளது. 

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த கூட்டமைப்பு நேற்று கல்வி அமைச்சிற்குச் சென்றிருந்தது. 

இதன்போது, அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தி அங்கு சென்றிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றைக் கோரியிருந்தனர். 

இதனையடுத்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் அந்த பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

எனினும், திருப்திகரமான தீர்வு எட்டப்படவில்லை என்றும் தங்களது கோரிக்கைக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இதேவேளை ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த விடயத்தை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம், தொடருந்து திணைக்கள முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களுக்குள் தீர்வில்லாவிட்டால் போராட்டம் - ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் எச்சரிக்கை  தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற கோரிக்கைக்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த கூட்டமைப்பு நேற்று கல்வி அமைச்சிற்குச் சென்றிருந்தது. இதன்போது, அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தி அங்கு சென்றிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றைக் கோரியிருந்தனர். இதனையடுத்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் அந்த பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். எனினும், திருப்திகரமான தீர்வு எட்டப்படவில்லை என்றும் தங்களது கோரிக்கைக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.இதேவேளை ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம், தொடருந்து திணைக்கள முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement