• Nov 23 2024

நுரையீரலில் பரவிய கிருமிகள் - சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் திடீர் மரணம்!

Chithra / Jun 14th 2024, 7:46 am
image

 

கண்டி திருத்துவக் கல்லூரி ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதான இளைஞன் நுரையீரலில் கிருமிகள் பரவியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஷபீர் அஹமட் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது தவறி விழுந்ததில் காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்துள்ளது.

சில நாட்களின் பின்னர் குறித்த மாணவன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சையின் பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மாணவனின் பெற்றோர் அவரை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு நுரையீரலில் கிருமிகள் கலந்திருப்பது தெரியவந்ததையடுத்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

கல்லூரியின் ஆதரவுடன் விசேட சிகிச்சைக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

நுரையீரலில் பரவிய கிருமிகள் - சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் திடீர் மரணம்  கண்டி திருத்துவக் கல்லூரி ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதான இளைஞன் நுரையீரலில் கிருமிகள் பரவியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.ஷபீர் அஹமட் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர்  உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த போது தவறி விழுந்ததில் காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்துள்ளது.சில நாட்களின் பின்னர் குறித்த மாணவன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.சிகிச்சையின் பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மாணவனின் பெற்றோர் அவரை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அங்கு நுரையீரலில் கிருமிகள் கலந்திருப்பது தெரியவந்ததையடுத்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.கல்லூரியின் ஆதரவுடன் விசேட சிகிச்சைக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement